Beauty

ஃபேஷியல் Tips

By  | 

அனைவருக்குமே தங்களது முகம் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதுவும் மெக்கப் எதுவும் போடாமலேயே முகம் பளிச்சிடும் அழகினை பெற வேண்டும் என்ற ஆசை. இது நியாயமான ஒரு ஆசையும் கூட.

எனினும் நாம் அழகு சாதன விற்பனை நிலையங்களில் கிடைக்க வுடிய இராசயனம் கலந்த பொருட்களையே பெரும்பாலும் பயன்படுத்துகின்றோம்.

இப்படி இரசாயனம் கலந்த மேக்கப் பொருட்களை முகத்தில் பூசி முக அழகை சிதைக்காமல் புத்திசாலிதனமாக இயற்கை பொருட்களை பயன்படுத்தி அழகு பெறுவதே நன்று.

இன்றைய சூழலில் நினைத்ததும் அழகுகலை நிலையங்களுக்கு செல்ல முடியாது. எனவே உடனடியாக உங்கள் அழகை பளிச்சிட செய்யும் இயற்கை பொருட்களை கொண்டு வீட்டிலேயே ஃபேஷியல் செய்வது எப்படி என பார்ப்போம்.

கெரட் ஃபேஷியல்:

கெரட் உங்களது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக மட்டுமல்லாமல் உங்களது அழகை மேம்படுத்தவும் உதவுகிறது. முதலில் ஒலிவ் ஒயிலை கொண்டு உங்களது முகத்தை மசாஜ் செய்து கொள்ளுங்கள் அதன் பின் முகத்தை கழுவி விடாமல் கெரட் சாறுடன் கடலை மா கலந்து முகத்தில் பூசுங்கள். பின் அரைமணி நேரம் கழித்து முகத்தில் உள்ள மாஸ்க்கை மசாஜ் செய்து கழுவி வந்தால் உங்களது முகத்தில் உள்ள சுருங்கள் அனைத்தும் மறைந்து போகும்.

முட்டை ஃபேஷியல்:

முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து அதனுடன் சிறிதளவு கடலை மா கலந்து முகத்திற்கு பேக் போடுங்கள் இதனால் உங்களது முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைவதோடு முகம் பளிச்சென்று பொலிவாக இருப்பதை காணலாம்.

 

வாழைப்பழ ஃபேஷியல்:

 நன்றாக பழுத்த வாழைப்பழத்தை எடுத்து பேஸ்ட் போல செய்து உங்களது முகத்தில் அப்ளை செய்து கொள்ளுங்கள். இந்த மாஸ்க்கை 20 நிமிடங்கள் கழித்து கழுவி விடுங்கள். இதனால் முகத்தில் சுருக்கங்கள் விழுவது தள்ளிப்போகும். வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் உங்களது முகத்தை பளிச்சென்று வைக்கும்.

பால்:

Portrait of a woman with a facial mask half face

பாலை கொண்டு தினமும் உங்களது முகத்தை மசாஜ் செய்து வந்தால் உங்களது முகம் பொலிவடையும். மேலும் பாலுடன் கிளிசரின் கலந்து முகத்திற்கு மேல் நோக்கியவாறு மசாஜ் செய்து வந்தால் உங்களது முகம் இளமை பொலிவு பெறும்..!

கெரட் சாறு:

கெரட் சாறுடன் தேன் கலந்து முகம் மற்றும் கழுத்து பகுதிகளுக்கு தினமும் நன்றாக மசாஜ் செய்து வந்தால் உங்களது முகம் பொலிவடையும், கழுத்து பகுதிகளில் உள்ள அழுக்குகளும் சின்னச்சின்ன சுருக்கங்களும் சீக்கிரமாக மறைவதை காணலாம்.

கடலை மா ஃபேஷியல்:

ஒரு டீஸ்பூன் தக்காளி சாறு, ஒரு டீஸ்பூன் வெள்ளரிக்காய் சாறு, சில சொட்டுகள் எலுமிச்சை சாறு, பால் சிறிதுடன் ஒரு டேபிள் ஸ்பூன் கடலை மா கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊறவிட்டு கழுவ, மாசுமறுவற்ற முகத்துடன் உங்களது நிறமும் கூடும். சருமம் மிருதுவாக தக்காளி சாறுடன் சிறிது பீட்ரூட் சாறு எலுமிச்சை சாறு சேர்த்து தடவவும். இது நல்ல பலனை கொடுக்கும்.

வெள்ளரிக்காய்:

வெள்ளரிக்காயை மிக்ஸியில் அடித்து அதை முகத்தில் தடவி அரை மணி நேரம் அல்லது 1 மணி நேரம் கழித்து முகம் கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும். உங்களது சரும நிறம் கூடும். முகத்தில் உள்ள எண்ணெய் பசைகள் நீங்கி முகம் பளபளப்பாக இருக்கும்.

பாசிப்பயறு மா:

எலுமிச்சை சாற்றில் பாசிப்பயறுமா கலந்து முகத்தில் தடவி 1 மணி நேரம் கழித்த கழுவினால் முகம் நிறம் பெறும். முகத்தில் உள்ள ஈரப்பதம் அதிகரிக்கும். முகம் பொலிவாகவும் இருக்கும்.

You must be logged in to post a comment Login