Antharangam

அண்ணனா, அன்புக்குரியவனா?

By  | 

கேள்வி:
எனக்கு வயது 19. நான் ஒருவரை காதலிக்கிறேன். இந்த விடயத்தை அண்ணாவிடம் சொன்னபோது அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். காரணம், சாதிப்பிரச்சினைதான். என்னால் அண்ணனை எதிர்த்து ஒரு முடிவு எடுக்கவும் முடியவில்லை, காதலை மறக்கவும் முடியவில்லை. எனக்கு ஒரு வழி சொல்வீர்களா?

பதில்:

உங்கள் காதலரை உங்கள் சகோதரருக்குப் பிடிக்காமல் இருப்பதற்கு என்ன காரணம் என்பதை ஆராயுங்கள். அந்தக் காரணத்தைக் கண்டுபிடித்துவிட்டால், அது நியாயமான காரணமாக இருந்தால் காதலைக் கைவிடவேண்டும். அப்படியில்லாத பட்சத்தில் காதலரின் சார்பாக சகோதரரிடம் வாதாடவேண்டும்.
உங்கள் சகோதரர் உங்கள் மீது பேரன்பு வைத்திருப்பவர் என்று சொல்கிறீர்கள். அப்படியானால், உங்கள் குடும்பத்தாரை சமாதானப்படுத்துவதை விட்டுவிட்டு, சகோதரர் மட்டும் உங்கள் பக்கம் உள்ள நியாயத்தைப் புரிந்துகொள்ள முயற்சியுங்கள். உங்கள் விருப்பம் நியாயமானது என்பதை உங்கள் சகோதரர் மட்டும் புரிந்துகொண்டாலே போதும், உங்கள் குடும்பத்தினரை அவரே சமாதானப்படுத்திவிடுவார்.
அப்படியல்லாமல், உங்கள் காதலை எதிர்ப்பதற்கு உங்கள் சகோதரர் கூறும் காரணம் நியாயமாக இருந்தால், காதலைக் கைவிடுவதைவிட வேறு வழியில்லை.

You must be logged in to post a comment Login