Health

அதிக உடல் எடை

By  | 

21 – ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய மருத்துவப் பிரச்சினை அதிக எடையுள்ள உடல் பருமன். எதனால் ஏற்படுகிறது?

அதிகமாக உண்பது: இப்போது பலவிதமான உணவு வகைகள் எளிதில் கிடைக்கின்றன. அதிலும் மாவுச்சத்து மிகுதியாக உள்ள உணவு வகைகளும், அதிக அளவில் உற்பத்தியாகி விற்பனை ஆகிறது. இதனால் நம் உடலின் தேவைக்கு அதிகமாக உண்பது உடம்பில் கொழுப்பாக மாறி எடை அதிகரிக்கிறது.

உடற்பயிற்சியின்மை: வாகன வசதி பெருகியுள்ள தற்காலத்தில் நடப்பது மிகவும் குறைந்துவிட்டது. உடலுக்குப் போதுமான அளவு தேகப் பயிற்சி கிடைப்பதில்லை. தினம் 30 முதல் 40 நிமிடங்கள் நடப்பது நல்லது. ஆனால் அது மட்டும் போதாது. மற்ற நேரங்களில் உடலுக்கு வேலை கொடுப்பது மிகவும் குறைவாக உள்ளது.

மிகச் சிலருக்கு மட்டும்தான் தைரோய்டு போன்ற நோய்களினால் அதிக எடை கூடி உள்ளது. மேலும் சொல்லப்போனால் ஒருவருக்குத் தினமும் 2000 கலோரி தேவைப்படுகிறது என்று வைத்துக் கொண்டால், அவர் உண்ணும் உணவில் 2500 கலோரி இருந்தால், ஒரே நாளில் 500 கலோரி உடம்பில் சேமிப்புஆகிவிடுகிறது. 15000 கலோரி செலவில்லாமல் உடம்பில் தங்கிவிட்டால் ஒரு கிலோ எடை கூடிவிடும்.செலவிடப்பிடாத எனர்ஜி உடம்பில் சேர்ந்து எடை கூடி விடுகிறது.

கடுமையாக வேலை செய்பவர்களுக்கு (உதாரணம்: கட்டட வேலையில் ஈடுபடுபவர்கள், விவசாய வேலை செய்பவர்கள்) கிட்டத்தட்ட 3000 கலோரி சத்து தேவைப்படுகிறது. அவர்கள்உண்ணும் உணவில் கலோரி அதற்கு மேல் இருக்காது. அவர்களுக்கு உடல் எடை கூடாது. எப்போதும் மிதமான நிலையில் இருக்கும். உடல் உழைப்பு குறைவாக இருப்பவர்களுக்கு சாப்பிடும்உணவில் உள்ள அத்தனை கலோரிகளும் எரிக்கப்படுவதில்லை.

 

You must be logged in to post a comment Login