Q&A

‘அதை’ எப்படித் அறிவது?

By  | 

கேள்வி:

வாழ்க்கைக்குத் தேவையான அனேக விடயங்களை வாசகர்களாகிய எமக்குத் தரும் மித்திரன் அந்தரங்கத்துக்கு நன்றி. எனது கேள்வி என்னவென்றால், ஒரு பெண் கருவுற்றிருக்கிறாள் என்பதை எந்த அறிகுறிகளைக் கொண்டு அறியலாம்? மற்றும் எதிர்பாராதவிதமாக ஒரு பெண் கருத்தரித்துவிட்டால், அதைப் பிறர் அறியாதவாறு கலைத்துவிட முடியுமா?

பதில்:

நீங்கள் ஆணா, பெண்ணா என்பது தெரியவில்லை. ஆனால், உங்கள் கேள்வி ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. காரணம், கருவுற்றிருப்பதற்கான அறிகுறிகளைக் காட்டாத தமிழ்த் திரைப்படங்களே இல்லை. இருக்கட்டும்.

ஒரு பெண் எதிர்பாராதவிதமாக கருத்தரிக்க வாய்ப்பில்லை. ஆண் ஒருவருடன் உறவு கொள்ளும் பட்சத்திலேயே அவர் 99 சதவீதம் கருவுற வாய்ப்பு உள்ளது. அப்படி அவர் உறவு கொண்டிருக்கும் பட்சத்தில், வாந்தி, தலைச்சுற்று, மயக்கம் என்பனவற்றை வெளித்தெரியும் அறிகுறிகளாகக் கொள்ள முடியும். பெண்ணின் நாடித் துடிப்பின் எண்ணிக்கையை வைத்தும் அவர் கருவுற்றிருப்பதை உறுதிசெய்துகொள்ள முடியும். மிகப் பொதுவாக, ஒரு பெண், தனது மாதவிடாய்ச் சுழற்சி நாட்கள் தாமதமாகுமிடத்தும், தான் கருவுற்றிருப்பதாகச் சந்தேகிக்கலாம்.

இதுபோன்ற அறிகுறிகள் சந்தேகத்தை ஏற்படுத்தும் பட்சத்தில், கருவுற்றிருப்பதைக் கண்டறியும் ஒரு சிறு பரிசோதனையை வீட்டிலேயே செய்துகொள்ள முடியும். மருந்தகங்களில் விற்பனையாகும் கருத்தரிப்புப் பரிசோதனைப் பட்டி ஒன்றை வாங்கி, பெண்ணின் சிறுநீரில் நனைத்து கர்ப்பத்தை உறுதி செய்ய முடியும். இதை எப்படிச் செய்வது என்பதற்கான விளக்கங்கள், அந்தப் பட்டியின் அட்டையில் குறிப்பிடப்பட்டிருக்கும். எளிமையாகச் செய்துகொள்ளக்கூடிய பரிசோதனை இது.

கருவுற்றிருப்பதைக் கலைப்பதற்கு தற்போது பல மாத்திரைகள், ஊசிமருந்துகள் என்பன வழங்கப்படுகின்றன.

ஆனால்….

திருமணம் ஆன பின், எதிர்பாராத விதமாகக் கருத்தரிக்கும் பட்சத்தில், தேவைப்பட்டால் மட்டும் இது போன்ற மருந்து மாத்திரைகள் மூலம் அதுவும் ஓரிரு தடவைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதையே ஒரு வழக்கமாக்கிக்கொண்டு கருவுறுவதும் மீண்டும் கலைப்பதுமாக இருந்தால், உயிராபத்துக்கள் கூட ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

You must be logged in to post a comment Login