Antharangam

அந்தரங்க கேள்வி பதில் தொகுப்பு: இடைநடுவில் வருவனவெல்லாம் கலைந்து போகும் மேகங்கள்

By  | 

கேள்வி:
எனக்கு வயது 19. கடந்த இரண்டு வரு­டங்­க­ளுக்கு முன் என் அக்­காவின் கணவர் என்னைத் தனது இரண்­டா­வது மனை­வி­யாக்­கிக்­கொள்ள முயன்றார். விடயம் வீட்­டா­ருக்குத் தெரி­ய­வ­ரவே முழுப் பழி­யையும் என் மேல் போட்­டு­விட்டுத் தப்­பித்­துக்­கொண்டார். தவறு ஏதும் செய்­யாத நான் உற­வி­னர்­களால் ஒதுக்­கப்­பட்டேன். அதற்குப் பின் இரண்டு வரு­டங்­க­ளாக நான் எந்த ஆணு­டனும் கதைப்­ப­தில்லை. ஆண்­க­ளையே வெறுத்தேன். எனக்கு என்ன செய்­வது என்று தெரி­ய­வில்லை. படிக்­கவும் முடி­ய­வில்லை. தயவு செய்து எனக்கு நல்ல வழி சொல்­லுங்கள். பழைய சம்­ப­வத்தை அவ­னிடம் சொன்னால் அவன் என்னைக் காத­லிப்­பானா? வெறுத்­து­வி­டு­வானா?

பதில்:
உங்­க­ளுக்கு ஏற்­பட்ட அவ­மா­னத்தால் உங்­க­ளிடம் ஒரு வைராக்­கியம் தோன்­றி­யி­ருக்­கி­றது. அந்த வைராக்­கி­யமே உங்­களை வாழ்வில் உயர்த்­தி­விடும். ஆனால், இப்­போது அந்த வைராக்­கி­யத்தின் பலம் கொஞ்சம் கொஞ்­ச­மாகக் குறைந்­து­வ­ரு­கி­றது. அத­னால்தான் உங்கள் சக மாண­வனைக் காத­லிக்க எண்­ணு­கி­றீர்கள். ஆனால் பாருங்கள்! அவரோ பார்­வையை மட்­டும்தான் பரி­மா­று­கிறார். இதி­லி­ருந்தே அவ­ருக்கு உங்­க­ளிடம் தோன்­றி­யி­ருப்­பது ஒரு இனக்­க­வர்ச்சி மட்­டுமே என்­பதைப் புரிந்­து­கொள்ள முடி­கி­றது.
நீங்கள் செய்­யாத தவ­றுக்கு தண்­டிக்­கப்­பட்­டவர். அதை­யிட்டு உங்கள் மேல் அனு­தாபம் தோன்­றலாம். ஆனால் இப்­போதோ தெரிந்தே ஒரு தவறு செய்ய முயற்­சிக்­கி­றீர்கள். இது தவிர்க்­கப்­பட வேண்­டிய விடயம்.

அந்­த­ரங்கம் பகு­திக்கு வரும் அனேக கடி­தங்­களை நீங்­களும் வாசித்­தி­ருப்­பீர்கள். இன்னும் இது­போன்ற கடி­தங்கள் எக்­கச்­சக்­கமாய் இருக்­கி­றது. ஆனால், ஒரே­வி­த­மான கேள்­விக்கு பதி­ல­ளிப்­பதைத் தவிர்ப்­ப­தற்­கா­கவே அது­போன்ற கடி­தங்­களும் தவிர்க்­கப்­ப­டு­கின்­றன. எனவே, இளமை எனும் பரிசை உங்­க­ளது பிர­கா­ச­மான எதிர்­கா­லத்­துக்கு அத்­தி­வா­ர­மாகப் போட முயற்­சிக்க வேண்­டுமே தவிர அதை விட்­டு­விட்டு அற்ப ஆயுள் கொண்ட ஆசையைத் தீர்த்­துக்­கொள்ளப் பயன்­ப­டுத்­தக்­கூ­டாது.
இன்னும் சில வரு­டங்­க­ளுக்கு, சரி, தவறு என்­ப­வற்றைச் சீர்தூக்கிப் பார்க்கும் ஒரு புத்திசாலித்தனம் உங்களிடம் ஏற்படும்வரை, அதாவது, நீங்கள் நன்றாகப் பயின்று பல்கலைக்கழகம் சென்று வெற்றியுடன் வெளியேறும் வரையில், உங்கள் அக்காவின் கணவரையே அனைத்து ஆண்களிடமும் பாருங்கள். இதே வைராக்கியத்தைத் தொடர்ந்து கடைப்பிடியுங்கள். இடைநடுவில் வருவனவெல்லாம் கலைந்து போகும் மேகங்கள் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். முக்கியமாக, உங்கள் சக மாணவரிடம் மென்மையான போக்கைக் கடைப்பிடிப்பதை நிறுத்திவிட்டு கல்வியிலேயே உங்கள் கவனத் தைச் செலுத்துங்கள்.

You must be logged in to post a comment Login