General

ஆணென்ன பெண்ணென்ன?

By  | 

புயலுக்குப் பெண் பெயர்களை வைத்தால் அதனால் அழிவு அதிகம் ஏற்படுகிறது என சில வருடங்களுக்கு முன் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் சொன்னார்கள். இதென்ன கொடுமை என்கிறீர்களா? ஆனால், விஷயம் சீரியஸ்.

ஆண் பெயர்களை புயலுக்கு வைக்கும்போது அந்த ஆண் பெயர்கள் காரணமாக அதிக முன்னெச்சரிக்கையை மக்கள் எடுத்துக்கொள்கிறார்கள் என்றும், ஆனால், பெண் பெயர்களை வைக்கும்போது, அவ்வளவு அச்ச உணர்வை அது மக்கள் மனதில் ஏற்படுத்துவதில்லை என்றும், அதனால், மக்கள் குறைந்த அளவு முன்னெச்சரிக்கையையே எடுத்துக்கொள்கிறார்கள் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

அமெரிக்காவை கடந்த 60 ஆண்டுகளில் தாக்கிய புயல்களைப் பற்றி ஆராய்ந்த இந்த ஆராய்ச்சியாளர்கள், பெண் பெயர்கள் சூட்டப்பட்ட புயல்கள், ஆண் பெயர்கள் சூட்டப்பட்ட புயல்களைக் காட்டிலும், இரட்டிப்பு மரணங்களை ஏற்படுத்தியிருக்கின்றன என்றும் கண்டறிந்திருக்கிறார்கள். இந்த அனிச்சையான பாலின மனோபாவம் காரணமாக விளையும் அலட்சியம் பேரழிவை ஏற்படுத்துவதால், புயல் மற்றும் சூறாவளிகளுக்கு பெயர் சூட்டும் முறையில் மாற்றம்வேண்டும் என்று விஞ்ஞானிகள் யோசனை சொல்லியிருக்கிறார்கள்.

புயலுக்கு ஆண் பெயரிட்டாலும் பெண் பெயரிட்டாலும், பெயரைப் பார்க்காமல், ஒவ்வொரு புயலும் எந்த அளவுக்கு அச்சுறுத்தலைத் தோற்றுவிக்கிறது என்பதை மக்கள் கவனத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்பதே அமெரிக்க தேசிய புயல் தடுப்பு மையத்தின் அறிவுரை.

அட, இப்பவும் சில புயல்கள் வந்துவிட்டுப் போகின்றன. நாம் பெயரைப் பற்றி யோசித்து முடிப்பதற்குள் எல்லாம் சுருட்டிச் சென்றுவிடுகின்றனவே

You must be logged in to post a comment Login