Q&A

ஆரவள்ளி பதில்கள்

By  | 

கேள்வி: காதலிக்காக நினைவுச்சின்னம் வைக்கும் ஆண்கள் மனைவிக்காக எதையும் செய்வதில்லையே… ஏன் ஆரவள்ளி?

இளம்பிறை யோகன், புத்தளம்.

 

பதில்: ஏ… லூசு. தாஜ்மஹால் யாருக்காக கட்டப்பட்டதென்று தெரியுமா? தெரியாவிட்டால் உங்கள் ‘மனைவி’யிடம் கேட்டுப் பாருங்கள்!

***

கேள்வி: மதிப்புக்குரிய ஆரவள்ளியே, எல்லா கட்சித் தலைவர்களும் தாங்களே வெற்றிபெற வேண்டும் என்று கடவுளிடம் கேட்கும்போது, கடவுள் யாருக்கு வெற்றி வாய்ப்பைக் கொடுப்பார்?

து. ஸ்டெல்லா, பெரிய எலபட மேற்பிரிவு.

பதில்: இதுவரையில் எல்லாக் கட்சித் தலைவர்களும் வெற்றி பெற்றுத்தானே இருக்கிறார்கள். நீங்கள் எந்த ஊரில் இருக்கிறீர்கள்!

***

கேள்வி: அன்பின் ஆரியே, நீங்கள் யாரையாவது காதலித்தது உண்டா?

நிரோ, பலாங்கொடை.

பதில்: ம்… உங்கள் கெட்ட நேரமோ என்னமோ என் ‘டைரி’ தொலைந்துவிட்டதே… ஹி… ஹி… ஹி…

***

கேள்வி: நம் நாட்டு வாலிபர்களை விட ‘இந்திய கொரில்லா’ அழகானவரா?

துணவியூர் நடா.

பதில்: என்ன நடா… மாத்தளை ‘ஜோதி’க்குத்தான் ‘பொறாமை’ என்றால் உங்களுக்குமா… உங்களுக்குத்தான் திருமணமாகிவிட்டதே…!

**

கேள்வி: அன்புள்ள ஆரவள்ளியே, தாயின் பாதத்தின் கீழ் சுவர்க்கம் உள்ளது. காதலியின் பாதத்தின் கீழ் என்ன உள்ளது?

ஏ. அமானுல்லாஹ், புத்தளம்.

 

பதில்: உங்களுக்கு ஏன் இந்த சந்தேகம். பாதத்தைத் தூக்கித்தான் பாருங்களேன்.

***

கேள்வி: நடைபெறப்போகும் தேர்தலிலாவது நமது நாட்டில் மக்கள் அனைவருக்கும் நல்ல நேர்மையான ஆட்சி செய்யக்கூடிய பிரதமர் கிடைப்பாரா வள்ளியே?

N.P. மொஹமட் அஸாம், பகினியாகஹிவெவ.

பதில்: பிச்சைக்காரர்களுக்கும் சிலசமயம் ‘சுடுசோர்’ கிடைப்பதுண்டு.

***

கேள்வி: ஆரவள்ளி, எனது நண்பன் ஒரே குடி. ஏன் இப்படிக் குடிக்கிறாய் என்று கேட்டால் “என் மனைவிதான்டா காரணம் அவள் தினம் தரும் அடியை தாங்கிக்கொள்ள தைரியம் வேண்டாமா!” என்றானே?

எஸ்.பி.பி. கணேஷ், தாண்டியடி.

 

பதில் : எதற்கு அடிக்கிறாள் என்று கேட்கும் தைரியம் உங்களிடம் இல்லையா?

***

கேள்வி: சபாஷ்! சரியான போட்டி ஆரியே… பெண் ஐயர் இல்லாத குறையை போக்கிவிட்டீர்கள். வாழ்த்துக்கள். எப்போது ஐயர் (ஐயரி) ஆனீர்கள்?

ஜோதி, மாத்தளை.

பதில் : உங்கள் இருவரையும் சேர்த்து வைக்கத்தான் நான் ஐயரானேன்.

 

You must be logged in to post a comment Login