Cinema

ஆரவ்-ராஹி திருமணம்

By  | 

பிக்பொஸ் பிரபலமான ஆரவ், மார்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்., மற்றும் விரைவில் வெளியாக உள்ள ராஜபீமா ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர், தன் காதலி ராஹியை, சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். இதில், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

 

குறிப்பாக, இவருடன் பங்கேற்ற பிக்பொஸ் பிரபலங்களான சினேகன், காயத்ரி ரகுராம், ஆர்த்தி, பிந்து மாதவி உள்ளிட்ட அனைவரும், ஆரவ் ஜோடியை நேரில் சென்று வாழ்த்தினர். ஆனால், ஓவியா மட்டும் மிஸ்ஸிங்.

இந்நிலையில், தன் காதல் மனைவியுடன் உள்ள படத்தை மேற்கோள் காட்டியுள்ள ஆரவ், ‘இமை போல் காப்பேன்’ என, கூறியுள்ளார்.

You must be logged in to post a comment Login