Love

இன்று முதல் தொடங்குகிறது காதல் வாரம்: கொண்டாட தயாரா?

By  | 

காதலர்களுக்காக வாலன்டைன் வாரம் கொண்டாடப்பட்டு வருவது உங்களுக்கு தெரியுமா? உண்மையில் வாலன்டைன் வாரத்தின் கடைசி தினம் தான், ‘வாலன்டைன் டே’ என்பது. ஒவ்வொரு வருடத்தின் பிப்ரவரி 7-ம் திகதியிலிருந்து, 14ம் திகதி வரை, ‘காதல் வாரம்’ அல்லது ‘காதலர் வாரம்’ கொண்டாடப்படுகிறது. இந்த வாரத்தின் ஒவ்வொரு நாளும் காதலின் ஒவ்வொரு கட்டத்தைக் குறிக்கிறது.

காதல் தின கொண்டாட்டத்தில் மூழ்குவதற்கு முன்பாக, காதலர்களுக்காக ஒதுக்கப்பட்ட அந்த ஏழு நாட்களின் சுவாரஸ்யங்களை தெரிந்துகொண்டால், உங்களது காதலும் உற்சாகமாய் கரைபுரண்டு ஓடும்.

07 – ஹேப்பி ரோஸ் டே

08 – ஹேப்பி ப்ரப்போஸ் டே

09 – ஹேப்பி சொக்லட் டே

10 – ஹேப்பி டெடி டே

11 – ஹேப்பி ப்ராமிஸ் டே

12 – ஹேப்பி ஹக் டே

13 – ஹேப்பி கிஸ் டே

14 – ஹேப்பி வாலன்டைன் டே

ஹேப்பி ரோஸ் டே 

ரோஜா மலர் காதலின் சின்னம். காதல் மலரான ரோஜாவின் பெயரால் கொண்டாடப்படுவதுதான், இந்த நாளுக்கான சிறப்பு. காதலிப்பவர்கள் தங்களின் மனம் கவர்ந்தவர்களுக்கு, காதலின் வெளிப்பாட்டை இந்த நாளில் தெரியப்படுத்துகிறார்கள். நண்பர்களாக இருக்கும் இருவர், காதலர்களாவோம் என்கிற ஆசையை வெளிப்படுத்தும் நாளாக, இந்த நாள் இருக்கிறது.

You must be logged in to post a comment Login