Cinema

இரண்டு மொழிகளில் வலிமை!?

By  | 

நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் வலிமை படத்தில் நடித்து வருகிறார். போனிகபூர் தயாரிக்கிறார். இப்படத்தில் அஜித் பொலிஸ் அதிகாரியாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. ஐதராபாத், சென்னை ஆகிய இடங்களில் முக்கியக் காட்சிகளைப் படமாக்கி முடித்துள்ளனர்.


கொரோனா அச்சுறுத்தலால் வலிமை படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பிரச்சினைகள் முழுவதுமாக தீர்ந்த பிறகுதான் மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் வலிமை படத்தை ஹிந்தியிலும் டப்பிங் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் ஹிந்தியில் வலிமை படத்தை ரிலீஸ் செய்ய போனிகபூர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு ஹிந்தியில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டால், அஜித் படங்களில் ஒரேநேரத்தில் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகும் முதல் படம் என்ற பெயரை வலிமை பெறும்.
இதற்கு முன்னர் ஹிந்தியில் ஷாரூக் கானின் அசோகா படத்தில் அஜித் நடித்திருந்தார். அதுபோக, ஸ்ரீதேவியின் இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்திலும் கௌரவத் தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

You must be logged in to post a comment Login