Antharangam

இரவுகள் வந்தாலே…!

By  | 

கேள்வி:

ஊர், பெயர் வெளியே தெரியாது என்ற நம்பிக்கையில்தான் அந்தரங்கத்துக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். நான் பண்பான ஒரு குடும்பத்தைச் சேர்ந்த பெண். வயது 26. நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெற்று ஏழு மாதங்கள் ஆகின்றன. ஆரம்பத்தில் எல்லாம் நன்றாகத்தான் இருந்தது, குறிப்பாக தாம்பத்தியம்! இப்போது அவரது நடவடிக்கைகள் எதுவும் சரியாக இல்லை. தாம்பத்தியத்தின்போது ஆபாசமாக அவர் கதைப்பது மட்டுமன்றி, என்னையும் அவ்வாறே கதைக்கச் சொல்கிறார். அது எனக்கு மிக மிக அசிங்கமான செயலாகத் தெரிகிறது. இதுவரை நான் அப்படிக் கதைத்ததேயில்லை. ஆனால் அவரோ நான் அப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறார். இரவுகள் வந்தாலே அருவருப்பாக இருக்கிறது.

 

பதில்:

இது, தாம்பத்தியத்தின் ஒரு அங்கம்தான். பலருக்கு – குறிப்பாகப் பெண்களுக்கு – இது ஒரு அதிர்ச்சி தரும் விடயமாகத்தான் இருக்கும். நிச்சயிக்கப்பட்ட திருமணம் மட்டுமன்றி, காதல் திருமணங்களில் கூட சிலநேரம் இதுபோன்ற குழப்பங்கள் ஏற்படும்.

காரணம் என்னவென்றால், நிச்சயிக்கப்பட்ட திருமணமோ – காதல் திருமணமோ… பெரும்பாலும் ஆண் தன்னை நல்லவனாகக் காட்டிக்கொள்ள முனைவதே! நேர்த்தியான உடை, கண்ணியமான பேச்சு, பண்பான நடவடிக்கைகள் என்பனவற்றையே ஆண் முன்னிறுத்துவான். காரணம், தன்னை நல்லவன் என்று காட்டிக்கொண்டால்தான் ஒரு பெண் தன்னை விரும்புவாள் என்பதே! மற்றொரு காரணம், பொதுவெளி! பொதுவெளியில் இதுபோன்ற நாகரிகம்தான் தன்னையும் மற்றவரையும் வேறுபடுத்திக் காட்டும் என்று நம்புகிறான். ஏறக்குறைய அது உண்மைதான்!

ஆனால், படுக்கையறை என்பது பொதுவெளியல்ல! அது, ஒரு ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் ’அறிந்துகொள்வதற்கான‘ ஓரிடம்! அங்கு, இரண்டு மனிதர்களின் உணர்ச்சிகளுக்கு மட்டுமே இடமிருக்கும்.

தாம்பத்தியத்தில் சுகம் என்பது கொடுத்துப் பெறுவது. ஒருவர் கேட்பதை மற்றொருவர் கொடுக்காவிட்டால், பரஸ்பர சந்தோஷம் அங்கு கிடைக்காது.

பெண்கள் பெரும்பாலும் ஆபாசமான கதைகளைக் கதைப்பதுமில்லை, கேட்க விரும்புவதுமில்லை. ஆனால், படுக்கையில் அவ்வார்த்தைகளை ஒரு பெண் பேசும்போது, அதனால் அந்த ஆண் தூண்டல் அடைகிறான். அந்தத் தூண்டல் மூலம் அவன் இன்பம் அடையப்போவதில்லை… மாறாக நீங்களே அதிகப்படியாக இன்பத்தை அனுபவிப்பீர்கள்.

‘என்னடா இது… இரவில் அப்படிக் கதைத்துவிட்டு, காலையில் எப்படி அவரின் முகம் பார்ப்பது?’ என்று யோசிக்காதீர்கள். அப்படியொரு தருணத்தை எதிர்கொள்ளும் கணவனும் மனைவியும் தனக்குள்ளே மீண்டும் மீண்டும் தூண்டல் அடைவார்கள். அதற்கான பலன்கள் அன்றே அவர்களுக்குக் கிடைக்கும். சில பெண்கள், தம் கணவரை ஆபாசமாகக் கதைக்கச் சொல்லி இன்புறுவதும் உண்டு என்பதை அறிவீர்களா?

யுத்தத்திலும் காதலிலும் (அதாவது காமத்திலும்) நெறிமுறை என்று எதுவுமில்லை. சரி, பிழை என்று எதுவுமில்லை. இந்த உண்மை தெரிந்த பெண்கள், கணவனைக் கெஞ்சிக் கூத்தாட வைத்த பிறகு, போனால் போகட்டும் என்ற ரீதியில் சில வார்த்தைகளைச் சொல்வார்கள். அது, அவர்களது சந்தோஷத்துக்கான திறவுகோல் என்பதை அவர்கள் அறிந்துவைத்திருப்பதனால்தான்!

 

You must be logged in to post a comment Login