Astrology

உங்கள் பெயரின் முதலெழுத்து P.., S., U..,V..,யில் தொடங்குகிறதா…?

By  | 

இன்றைய திகதியில் பெண்கள் ஏராளமான பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறார்கள். அதிலும் கொரோனா காரணமாக அவர்கள் கூடுதல் நேரத்தை தங்களுடைய குடும்ப உறுப்பினர்களுடன் செலவிட்டு வருவதால், அவர்களை உற்சாகமான மனநிலையில் இயங்க வைப்பதற்காக தங்களை கூடுதலாக வருத்திக் கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் இவர்களுக்கு உதவிடும் வகையிலும், அவர்களுக்கு மேலும் ஊக்கம் கொடுக்கும் வகையிலும் எண் கணித சோதிட முறையில் சில ஆலோசனைகளை வழங்குகிறோம்.

உங்கள் பிறந்த திகதியில் உள்ள நாள், மாதம், வருடம் ஆகியவற்றை கூட்டினால் வரும் எண்ணை கொண்டு பிறந்தநாள் பலன்கள் கணக்கிடப்படுகின்றன. நாம் பிறந்த நேரத்தில் உள்ள கிரகங்களின் நிலையைக் கொண்டே எம்முடைய வாழ்க்கை தீர்மானிக்கப்படுகிறது. ஒவ்வொரு எண்ணிற்கும், ஒரு கிரகமும், அந்த கிரகங்களுக்கு நட்பு கிரகமும், தீய கிரகம் கிரகங்களும் உள்ளன, அவற்றை கொண்டு பிறந்த நாள் பலன்கள் கணிக்கப்படுகின்றன.

உங்கள் பிறந்த திகதி, மாதம், வருடம் ஆகியவற்றை எண் கணித சோதிட முறை மூலம் கண்டறிந்து, ஒன்றிலிருந்து ஒன்பது வரையிலான எண்களில், எது உங்களின் எண் என்பதையும், அதற்குரிய பலன்கள் என்ன என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

உங்கள் பிறந்த எண், அந்த எண்ணுக்குரிய கிரகம், அதற்குரிய அதிர்ஷ்ட நாள், அதிர்ஷ்ட கிழமை, அதிர்ஷ்ட தெய்வம், அதிர்ஷ்ட ரத்தினம், அதிர்ஷ்ட வண்ணம்… போன்றவற்றை தெரிந்துகொண்டு, சங்கடமான சூழ்நிலைகளிலும் வெற்றிக்கான சூட்சமத்தைத் தெரிந்துகொண்டு, வாழ்க்கையில் வெற்றி பெற என் கணிதம் உதவுகிறது.

எண் கணிதம் பற்றிய சிறப்பம்சங்களை தற்போது காணலாம்.

  • பெயரை விட பிறந்த திகதியை கொண்டு சரியான பலன்களை தெரிந்து கொள்வதுதான் என் கணித பலன் சிறப்பம்சம் பெறுகிறது. பெயரை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். ஆனால் பிறந்தநாளை மாற்ற இயலாது.
  • எண்களின் ஆதிக்கமில்லாமல் எதுவும் நடப்பதில்லை.
  • ஒவ்வொரு மனிதனையும் ஒரு குறிப்பிட்ட எண் ஆதிக்கம் செலுத்துகிறது.
  • ஒவ்வொரு எண்ணும் தன் மடங்கு எண்களை கவர்ந்திழுக்கும்.
  • ஒவ்வொரு எண்ணும் தன் பக்கத்து எண்களுடன் தொடர்புகொள்ளும்.
  • ஒரு எண் இன்னொரு எண்ணுடன் இணையும்போது,அவைகளின் கூட்டு எண்ணின் ஆதிக்கமே செயல்படும்.
  • ஒருவர் பிறந்த திகதி எண் அதாவது பிறவி எண் அவருடைய அக வாழ்க்கை முறையையும், திகதி,மாதம்,வருடம் இவைகளின் கூட்டு எண் அதாவது விதி எண் அவருடைய புற வாழ்க்கை முறையையும் குறிக்கும்.
  • ஒரு பெயர் அல்லது பிறந்த திகதியில் பலமுறை இடம் பெறும் எண்கள், வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
  • குடியிருக்கும் வீட்டின் எண் மாறும்பொழுது, வாழ்க்கை முறையும் மாறுதலடையும்.
  • பெயரின் முதலெழுத்து ஒருவருடைய வாழ்க்கையை வழி நடத்தி செல்லும் தன்மையுடையது.
  • ஆண் பெயரை பெண்களுக்கும்,பெண் பெயரை ஆண்களுக்கும் வைக்கக்கூடாது.
  • ஒரு பெயரின் முதல்,கடை எழுத்துக்களின் மதிப்புகளைக்கூட்டி ஓரிலக்கமாக மாற்றி கண்ட எண் எதுவோ . அந்த எண்ணின் ஆதிக்கம், அந்த நபர் மீது இருக்கும்.
  • இரு நபர்களின் பெயர் முதல் எழுத்துக்களின் மதிப்புகளைக்கூட்டி, ஓரிலக்கமாக மாற்றி கண்ட எண் எதுவோ , அந்த எண்ணிற்குரிய கிரகத்தின் காரகம் சம்பந்தமான பரிமாற்றங்களே அந்த இரு நபர்களிடையே நடக்கும்.
  • இரு நபர்களின் பிறவி எண்களின் மதிப்புகளைக்கூட்டி ஓரிலக்கமாக மாற்றி கண்ட எண் எதுவோ , அந்த எண்ணிற்குரிய கிரகத்தின் காரகம் சம்பந்தமான பரிமாற்றங்களே அந்த இரு நபர்களிடையே நடக்கும்.
  • ஒரு நபரின் பிறவி எண் மற்றும் அவர் வசிக்கும் வீட்டு எண்ணின் மதிப்புகளைக்கூட்டி ஓரிலக்கமாக மாற்றி கண்ட எண் எதுவோ , அந்த எண்ணிற்குரிய கிரகத்தின் காரகம் சம்பந்தமான பலன்களை, அந்த நபர் அந்த வீட்டில் வசிக்கும்போது அனுபவிப்பார்.
  • எண் கணிதத்தில் ஒன்பதாம் எண்ணுடன் எந்த எண்ணை கூட்டினாலும், கூட்டிய எண்ணே திரும்பக் கிடைக்கும். எனவே ஒன்பதாம் எண் எந்த எழுத்திற்கும் ஒதுக்கப்படவில்லை.
  • ஒருவருடைய பெயரின் முதல்,கடை எழுத்துக்களின் கூட்டு மதிப்பிற்குரிய கிரகம் எதுவோ, அக்கிரகம் அவருடைய ஜாதகத்தில் லக்னத்துடன் தொடர்புகொண்டிருக்கும்.
  • 1.சூரியன் 2.சந்திரன் 3.குரு 4.ராகு 5.புதன் 6.சுக்கிரன் 7.கேது 8.சனி 9.செவ்வாய், இது தான் எண்களுக்குரிய கிரக ஆதிக்கமாக வரையறுக்கப்பட்டுள்ளன.
  • ஒரு பெயரில் ஒரே கிரகத்தின் காரகத்தன்மை பலமுறை வந்தால், அந்த கிரகத்தின் ஆதிக்கம் அந்த நபர் மீது அதிகமாக இருக்கும்.
  • பெண்களின் பெயர் முதலெழுத்து P அல்லது S ஆக அமைந்தால், அவர்களின் வாழ்க்கையில் பல்வேறு சோதனைகள் வரும். இதற்கு அவர்களுக்கு நாக தோசம் இருப்பதும் ஒரு காரணம். இவர்களைப் போலவே, சில பெண்களின் பெயரிலுள்ள முதலெழுத்து U அல்லது V ஆக அமைந்தால் அவர்கள் சிறு வயதிலேயே எதிர்மறை சிந்தனைக்குட்பட்டு, பாதை மாறி பயணிக்கக்கூடும். இவர்களுக்கெல்லாம் அவர்களுடைய பெயர் ஒற்றை வார்த்தையாக இல்லாமல் இரட்டை வார்த்தையாக அமைந்தால் வாழ்க்கை சிறப்படையும். சிலருக்கு பெயருக்கு முன் போடும் ஒற்றை எழுத்து, ஒன்றுக்கு மேல் இருந்தால் வாழ்க்கை சிறப்படையும்.

இன்னும் பல சிறப்பம்சங்கள் இருக்கிறது.

தொடரும்…
தொகுப்பு: அஸ்வினி ப்ரியன்.

 

 

 

You must be logged in to post a comment Login