Poetries

உன் அன்பன்!

By  | 

தினந்தோறும்

உனை காதலிக்க

திண்டாடுகிறேன் நான்.

கொண்டாட நாள் வந்தும்

ஏமாறுகிறேன் நான்.

ஏனிந்த பிரிவென்று

பித்தாகிறேன் நான்.

ΟΟΟ

வின்னோடும் முகிலோடும்

கடலோடும் அதில்

சிற்றலையோடும்

பகலோடும் இரவோடும்

மழையோடும் வெயிலோடும்

உன் பின்னே நானோட

திகதி வைத்து பிரித்ததா

அரசாங்கம் – நம் காதலை

தேம்ப வைக்க பிரித்ததா

அரசாங்கம்..!

ΟΟΟ

ஊரடங்கு சட்டதிலும்

ஊரடங்கும்

உறவடங்குமா

வீதிகள் மூடிய போதும்

உன்னை

காணாது விழி மூடிடுமா..!

ΟΟΟ

துணி கொண்டு கவசம்

தைத்தேன் முகம் மறைக்க

எதைகொண்டு நானும் கவசம்

தைக்க

காதல் மனதை மறைக்க

ΟΟΟ

உனக்கு தூதனுப்ப

முற்றத்தில் நின்றிருந்த

பூக்களை கேட்டேன்

அது வாடி நின்றது

காற்றை கேட்டேன்

அது பயத்தில் அமைதியானது

தனியாய் நின்ற வீதியை கேட்டேன்

அது வெறிச்சோடி போனது

ΟΟΟ

விடிந்தும் வராத

சூரியனை தட்டிகேட்டேன்

அது வேலையின்மையால்

கால் நீட்டிகொண்டு

தூங்குகிறேன் என்றது

ΟΟΟ

இரவாகிபோனதால்

நிலா வந்தது

அதும் நோய் வரும்

என்பதால் விடியலிலே

சென்றுவிட்டது

ΟΟΟ

கடிதம் அனுப்ப

தபாற்காரனும்

வேலையில்லை

காதல் நோய் என மருந்தெடுக்க

வைத்தியரிடமும் மருந்தும் இல்லை

ΟΟΟ

ஓடி வந்து சேதி

சொல்ல நீ என் அருகிலும்

இல்லை

பாடி பாடி வந்து செல்லும் நம்மூர்

பேருந்துகளும் சேவையில் இல்லை

ΟΟΟ

கோவில்களில் சாமிக்கே

அர்ச்சனையில்லை

கோவில் வாசலில் உனக்காய்

பிச்சையெடுக்கும் எனக்குமட்டும்

எப்படி சில்லறை…

ΟΟΟ

சவப்பெட்டியில் பிணம் போல

படுத்துகொண்டேன்

உலகம் விடிந்தும் நான்

மட்டும் இருளானேன்

ΟΟΟ

சுபமாய் நீ வாழ

ஜெபமாய் நான் சொல்ல

உனதன்பின்

தாசன் நான்

காதலுடன் சுபதாசன்

-ஹொப்டனூர் சுபதாசன்

You must be logged in to post a comment Login