Stories

உன் சிக்கன சிரிப்பைதான் சேகரிக்கிறேன்

By  | 

ஒரு நாள் அப்படிதான் நீ கடைத்தெருவுக்கு வந்திருந்தாய்

அதென்னடி எப்போதுமே

உனை சுற்றி ஓர் குழந்தை கூட்டம்?

கேட்டால் தோழிகலென்பாய்

உன் இடையளவு வளராதது எல்லாம் உனக்கு தோழிகளானது எப்படி என்பதில் எப்போதுமே எனக்கு சந்தேகம்தான்.

அதுவும் அந்த ஐந்தரை வயது அரை டிக்கட்டு உனை வாடி போடி என அழைப்பதை பார்த்தால் எனக்கு சிரிப்புதான் வரும்.

எந்த இடத்தில் நீ நின்றாலும் உனை எதேச்சையாய் சந்திப்பதற்கு செய்யுமதிட்டமெல்லாம் எப்போதுமே எனக்கு சாதகமாய் அமைந்துவிடுகிறது.

அன்றும் அப்படிதான்…

கடைத்தெருவில் ஒரு ஐஸ்கிறீம் வண்டிக்கருகில் நின்றுகொண்டிருந்தாய்

உனை நிழல்; தொடும் தூரத்தில் பின்தொடர்ந்த நான்,

நீ திரும்பி பார்ப்பதற்கு முன் எதேச்சையாக உனை சந்திப்பதாய்

ஒரு சுற்று சுற்றி உன்னருகில் வந்து நிற்க, “வந்துட்டியா?” என கலகலவென சிரித்தாய்.

உன் சிரிப்படங்கும் முன்பே,

“என்ன மாமா இப்படி பன்னிட்டியே” என சில சில்லறரைகளை உன் உள்ளங்கையில் திணித்த அந்த அரை டிக்கட்டு எனைப்பார்த்து முறைக்க,

நான் திருதிருவென விழித்தேன் எதெற்;கென்று தெரியாமல்.

“சரிடி ஐஸ்கிறீpம் வேணுமா?” என கேட்க அதற்கும் சிரித்துக்கொண்;டே “ஐந்து” என்றாய்.

இன்னொரு வாலும் எனை முறைத்துக்கொண்டே உன்னிடம் சில சில்லரைகளை தர, சிரித்துகொண்டே “உன்னால என் காட்டுல செம்ம மழை மாப்ள” என்றாய் என் கன்னம் கிள்ளி.

எனக்கு புரியவே இல்லையடி.

நீ சிரிப்பதுவும், சிரித்து முடிய உன் குட்டி தோழிகள் சில்லரைகளை உன் உள்ளங்கையில் திணிப்பதுவும், சூடாகிவிட்டேன் நான்.

இதில் ஐஸ்கிறீம் வண்டிக்காரன் வேறு

“தள்ளி நில்லுயா பெட்டிக்குள்ள இருக்க ஐஸ்கிறீமெல்லாம் உருகிடபோகுது” என கடுப்பாகிவிட்டேன் நான்.

“ஏனடி சிரிக்கின்றாய்” என நான் கேட்க அதற்கும் சிரித்தாய்.

“சொல்றியா இல்லியா” என நான் கொப்புளித்துபோக,

“என்ன மச்சி சூடாகிற ஒரு ஐஸ்கிறீம் வாங்கி சாப்பிடு சரியாகிவிடும” என்றாய் கூலாக,

“காசில்ல நீ தின்ற மிச்சம் கொடு” என நான் கேட்க நான் கேட்க

அரைவாசி ஐஸ்கிறீம் தந்து கொண்டே… இன்னும் கொஞ்சம் சில்லரைகளை சேர்த்துகொண்டாய்.

நன்றாக புரிந்து போனது.

வழமையாக நான் வம்பிழுப்பதால் இன்று நீயா? என உன் ஒற்றை ஜடை பற்றியிழுக்க

“விடுடா” என கத்திய நீ…

“பந்தயம் கட்டினேன்டா” என்றாய் குறும்பாக

“என்னவென்று” என்றேன் உன் ஜடையை விடாமல்.

“நீ வருவாயென்று”

“வேறு”

“ஐஸ்கிறீம் வாங்கி தருவாயென்று”

“வேறு”

“அதில் பாதி கேட்பாயென்று”

“அப்புறம் வேறென்னவென்று…”

“என் ஜடையைப்பிடித்திழுப்பாயென்று கூட ஓர் பந்தயம் உன்டடா” என கண் சிமிட்டி நீ சொல்லி

என் பிடி விழக்கிட…

நைசாக நழுவி… ஓடிப்போக

“அடிக்கள்ளி” என உனை துரத்திக்கொண்டே நான் வர

தூரத்தில் ஓடிய நீ…

அங்கொரு தெருவில் நின்று

“நீ எனைத்துரத்தி வருவாயென்றும் ஒரு பந்தயம் உன்டடா”

என ஓடி மறைந்தாய்.

நீ சிதறவிட்ட சில்லரையயையும்…

சிரிப்பையும்

சேகரித்துகொண்டே நான் வர, என் எதிரில் காய்கறி வாங்கி கொண்டிருந்த உன் அம்மா சொன்னாள.;

‘என்ன இன்னிக்கு கடைத்தெருவே கல்யாண கோலமாய் கலை கட்டியிருக்pறது; என்று.

-லிங் சின்னா

You must be logged in to post a comment Login