
Others Poetries
உயிர்த்த ஞாயிறு
ஆகமங்களால்
ஆலயங்கள்
புனிதங்கள் வாழும்
புண்ணியத் தளத்தில்
பூமியை சுழற்றும்
புன்னியவானும் எமை
புறந்தள்ளி விட்டாரே
ஆசைகளை கோரிக்கைகளாக
அவாவுடன் ஆசிபெற
இறைவனை நாடியது
இவர்கள் பிழையானதோ
பிஞ்சுகள் பலர்
பிழிந்தெடுக்கப்பட்டார்கள்
இரத்தக்கறையால்
உயிர்களை
உடலங்களாக பிரிக்க
ஆவல் கொண்ட
ஆயுத தாரியே
போர்க்களங்களெல்லாம்
சவக்குழிகளாக
சலவை செய்யப்பட்ட
வரலாறு பல
வீரங்களாகவே
விமர்சிக்கப்படுகின்றன
இறைத்தளத்திலே
இறுதிப்பயணம்
இத்தனை பேருக்கு
உரிமையாய் தொடுத்த
உன்னை
பாவங்கள்
பழி வாங்கிக்கொண்டன
ஆண்டவனின்
இல்லத்திலே
இறையாகிப்போன
இரத்தக்கறைகள்
வடுக்கலல்ல
வரலாறுகளே
புனிதத்தலங்களையாவது
புத்தி சாதுர்யமாய்
விட்டு வையுங்கள்
இலக்குகள்
இங்கே வேண்டாம்
மனிதங்கள்
மகத்துவமானவை
இனியாவது
உயிர்த்த ஞாயிறு
உயிர் பெறட்டும்
உயிர் நீத்த
உறவுகளே
உங்கள் ஆன்மா
அமைதிபெறட்டும்
– அ. ராஜேந்திரகுமார்
ஹொப்டன்.
You must be logged in to post a comment Login