Home Garden

உருளைக்கிழங்குகளிலேயே ரோஜா செடி வளர்க்கலாம்

By  | 

ரோஜா செடி எளிமையாக அதிகமான முறையில் நாடும் முறை. நீங்களும் தவறாமல் முயற்சி செய்து பாருங்கள் நண்பர்களே. உங்கள் வீட்டிலும் பூத்து குலுங்கும்.

நன்கு வளர்ந்த ரோஜா கிளையை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். ஒரு அடி அளவுகளில் வெட்டி கொள்ளுங்கள்.

நீங்கள் வெட்டி வைத்த துண்டுகளில் ஒரு சில இலைகள் இருக்குமாறு வைத்துவிட்டு, மீதி இலைகளை நீக்கிகொள்ளவும்.இந்த இலைகள் ஒளிசேர்கையை பார்த்துகொள்ளும்.

உருளை கிழங்கு ஒன்றை எடுத்து சிறிது ஓட்டை போட்டு கொள்ள வேண்டும், பின்னர் ரோஜா செடி துண்டுகளை உருளை கிழங்கில் சொருகவும்.இப்பொழுது நடுவதற்கு தயாராகிவிட்டது. உருளைக்கிழங்கு ஈரபதத்தை வைத்து கொள்ளும்.செடி காய்ந்து விடாமல் பார்த்து கொள்ளும். அதுவே உரமாக மாறவிடும்.     

      

அதை அப்படியே துக்கி மண்ணிலோ அல்லது தொட்டிக்குள்ளோ வைத்து மண்ணைப் போட்டு மூடி விடுங்கள். பிறகு வழக்கம் போல தொட்டியில் நீர் விடுங்கள். மிக வேகமாகவும் செழித்தும் வளரும். நிறைய பூக்கள் பூக்கும். இதற்கு ரோஜா செடி தேவையில்லை. ரோஜாவை வெட்டிய குச்சிகள் மட்டும் இருந்தாலே போதும். அதிலேயே செடி வளர்த்துவிடலாம்.

.

You must be logged in to post a comment Login