Cookery

எக்லஸ் கோகனட் குக்கீஸ் செய்முறை!

By  | 

தேவையான பொருட்கள்

* கோதுமை மா – ஒரு கப்
* பேக்கிங் பவுடர் – ஒரு தேக்கரண்டி
* வெண்ணெய் – அரை கப்
* பொடித்த சர்க்கரை – கால் கப்
* ஐசிங் சுகர் – முக்கால் கப்
* வெனிலா எசென்ஸ் – 2 தேக்கரண்டி
* டெசிகேட்டட் கோகனட் – முக்கால்
* உப்பு – ஒரு சிட்டிகை

செய்முறை

கோதுரம மா, உப்பு, பேக்கிங் பவுடர் மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து சலித்துக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் சேர்த்து நிறம் மாறும்வரை எலெக்ட்ரிக் பீட்டரால் நன்கு அடிக்கவும்.

இத்துடன் சிறிது சிறிதாக ஐசிங் சுகர் சேர்த்து நன்கு அடிக்கவும். பிறகு, பொடித்த சர்க்கரை சேர்த்து க்ரீம் போல ஆகும்வரை அடிக்கவும்.

வெனிலா எசென்ஸை இந்த க்ரீமுடன் சேர்க்கவும். இத்துடன் மைதா மாவு சேர்த்து கலந்து, பிறகு டெசிகேட்டட் கோகனட் சேர்த்து பிசைந்துக்கொள்ளவும்.

மா சேர்ந்து உருண்டுவந்ததும், மாவை ஒரு சிறிய உருண்டை கரண்டியால் எடுத்து பேக்கிங் ட்ரேயில் இடைவெளிவிட்டு அடுக்கி 180 டிகிரி வெப்பத்தில் பிரீஹீட் செய்த அவனில் (oven) வைத்து 10 முதல் 15 நிமிடங்கள் வரை பேக் செய்யவும்.

கீழ்ப்பாகம் சற்று சிவந்ததும் வெளியில் எடுத்து ஆறவைக்கவும். பிறகு காற்றுப்புகாத டப்பாக்களில் சேகரித்து வைக்கவும்.

You must be logged in to post a comment Login