Antharangam

என் கணவர் அன்பாக இல்லை!

By  | 

கேள்வி: 

எனக்கு 23 வயது. திருமணமாகி 2 வருடங்கள். ஒரு வயதில் ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறது. எனது திருமணம் காதல் திருமணம். ஆனால், என் கணவர் என்னிடம் அன்பாக இல்லாததாக உணர்கிறேன். இந்த நிலை தொடர்ந்தால், நான் சீக்கிரமே பைத்தியமாகிவிடுவேனோ என்றும் பயமாக இருக்கிறது. நீண்ட கடிதம் என்பதால் ஒதுக்கிவிடாது எனக்கு நல்ல பதில் ஒன்றைத் தரவும்.

பதில்:

உங்கள் கடிதத்தை முழுமையாகப் பிரசுரிக்க முடியாது என்றாலும், மிகவும் உருக்கமாக இருந்தது. அதேவேளை இந்தக் கடிதம், மிகவும் தாமதமாகவே தெரிவுசெய்யப்பட்டது. இது குறித்து மிகவும் வருந்துகிறோம். உங்கள் பிரச்சினைக்கான தீர்வை, தாமதமாகவேனும் தருகிறோம். தாமதத்துக்கு மன்னித்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் நினைப்பது போல் உங்களுக்கு எந்தவிதமான மனநோயும் இல்லை. அதீத அழுத்தத்துக்கு உட்பட்டகவர்கள் இவ்வாறு தனிமையில் கதைப்பதுண்டு. ஆனால், அந்த அழுத்தம் நீங்கிவிட்டால், இந்நிலை தோன்றுவதில்லை.

உங்களது கணவர் உங்கள் மேல் நிச்சயம் கவனம் செலுத்தவேண்டும். அதில் சந்தேகமேயில்லை. தன் மனைவியின் எண்ணங்களை, அவர் சொல்வதற்கு முன்னரே தெரிந்துகொண்டு செய்பவரே, சிறந்த கணவராக இருக்க முடியும். உங்களது இந்த நிலைக்கு உங்கள் கணவரும் ஒரு காரணம் என்பது மறுப்பதற்கில்லை.

ஆனால், இந்தப் பிரச்சினையில் இருந்து வெளிவர, நீங்கள்தான் முயற்சி செய்யவேண்டும். முதலில், உங்களுக்கு இப்போது ஒரு துணை உங்கள் மகன்  இருக்கிறது. அவனுடன் செலவிடும் நேரத்தைத் தவிர, எஞ்சிய நேரங்களில் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுடன் அளவளாவு­வதில் செலவிட முயற்சியுங்கள். நீங்கள் தனிக்குடித்தனக்காரர் என்றால், உங்களுக்கு வசதிப்பட்டால், உங்கள் தாய் அல்லது வேறு உறவினர் ஒருவரை உங்களுடன் தங்கவைத்துக்கொள்ளுங்கள். கல்வி கற்பதில் ஆர்வம் உள்ளவராக இருந்தால், ஏதேனும் ஒரு உயர்கல்வித் துறை­யைத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம். சுருக்கமாகச் சொன்னால், நீங்கள் வாய்­விட்டுப் பேசுவதற்கு உகந்த சூழலை உருவாக்கவோ அல்லது அத்தகைய சூழல் ஒன்றில் நீங்கள் நேரத்தைச் செலவிடவோ முயற்சி செய்யுங்கள். மேலும், நீங்கள் ஒரு மனநல வைத்தியரைச் சந்திப்பதும் நல்லது. இதற்கு, உங்களுக்கு மனநோய் என்று அர்த்தமல்ல. உங்கள் மனதைப் புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்வதற்கு அவரிடம் இருந்து சிறந்த வழிகாட்டல்கள் கிடைக்கும்.

ஆனால், இவற்றில் நீங்கள் எதைச் செய்தாலும், உங்கள் கணவர் உங்களுடன் பேசுவதற்கு நேரம் ஒதுக்கிச் செயற்படாதவிடத்து, இந்தப் பிரச்சினை தொடரவே செய்யும். எனவே, உங்கள் கணவர் தன்னை மாற்றிக்கொள்வதற்கான முயற்சிகளைச் செய்யுங்கள். இந்தக் கேள்வி பதிலைக்கூட அவரிடம் காட்டி, நீங்கள் எவ்வளவு தூரம் தனிமையாக உணர்கிறீர்கள் என்பதை அவருக்கு உணர்த்துங்கள். நிச்சயமாக உங்கள் கணவர் உங்களைப் புரிந்துகொள்வார். நம்பிக்கையுடன் இருங்கள்!

You must be logged in to post a comment Login