Articles

எலிக்குத் தங்கப்பதக்கம்!

By  | 

கம்போடியாவைச் சேர்ந்த மகாவா என்ற எலி, ஏழு ஆண்டுகளாகக் கண்ணிவெடிகளை கண்டுபிடித்து அகற்ற உதவியதற்காக தங்கப்பதக்கம் வென்றுள்ளது.

கண்ணிவெடிகளை அகற்றுவது மிகவும் கடினமான ஆபத்தான வேலை. ஒரு மைதானத்தில் வெடிகளை கண்டுபிடிக்க மனிதர்களுக்கு நான்கு நாட்கள் ஆகும். ஆனால் நம் மகாவா எலி அரை மணிநேரத்தில் நிலத்தில் புதைந்திருக்கும் வெடிகளை கண்டுபிடித்துவிடும். மகாவா எலிக்காக, பிரத்யேக தங்கப்பதக்கம் வடிவமைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

You must be logged in to post a comment Login