Health

ஏக பாத கபோடாசனா

By  | 

புறா போல அமர்ந்திருக்கும் நிலை

செய்முறை:
யோகா மேட்டில் முதலில் முழங்காலிட்டு அமர்ந்துகொண்டு பின் மெதுவாக வலக்காலை பத்மாசன நிலைக்கு நகர்த்தி அமர்ந்துகொண்டு இடக்காலை பின்னோக்கி நீளச்செய்து இரு கைகளையும் தரை தொடுமாறு வைத்துக்கொள்ளவும். இதே நிலையில் 30 வினாடிகள் இருந்துவிட்டு பின் கால் மாற்றி இதே பயிற்சியை மீண்டும் 30 வினாடிகள் செய்யலாம். பார்ப்பதற்கு புறாக்கள் அமர்ந்திருப்பது போன்று தோற்றமளிக்கும்.

பலன்கள்:
இந்த யோகாசனப் பயிற்சியானது உங்களது கால் இணைப்புத் தசைகள் மற்றும் திசுக்களை வலுவாக்கும். இடுப்பு மற்றும் முதுகெலும்புகளில் நிலவும் இறுக்கத்தை குறைக்கும்.
இரத்த அழுத்தத்தை சீராக்கி மனம் மற்றும் உடலை அமைதி நிலையில் வைத்துக்கொள்ள உதவும்.

You must be logged in to post a comment Login