Jokes

ஒரு வரி திகில் கதை!

By  | 

மூன்று நண்பர்கள் 100 மாடிகள் கொண்ட ஒரு பில்டிங்கில் தங்கி இருந்தனர். ஒரு நாள் லிஃப்ட் வேலை செய்யவில்லை.

மூவரும் கதை சொல்லிக்கொண்டே களைப்பு தெரியாமல் மாடி ஏறிவிடலாம் என ப்ளான் செய்துகொண்டு ஏறினார்கள்.

முதல் நபர் 50ஆவது மாடி வரை ஒரு ACTION கதை சொல்லிக்கொண்டே வந்தார்.

இரண்டாவது நபர் 99ஆவது மாடி வரை ஒரு COMEDY கதை சொல்லிக்கொண்டே வந்தார்.

மூன்றாவது நண்பர் மிகவும் திகிலான கதையை ஒரு வரியில் சொன்னார்.

“ரூம் சாவியை கார்லயே மறந்துவிட்டு வந்துட்டேன்.”

You must be logged in to post a comment Login