General

கடுமையான தண்டனைகளும் நல்ல காரணத்துக்காகவே!

By  | 

வெற்றியைக் குவிக்கும் வாழ்விற்கு, சில சமயங்களில், கடுமையான தண்டனைகள் தவிர்க்க முடியாதவை.
நமது அரைகுறை அறிவினால் நாம் கொள்ளும் தவறான எண்ணங்கள், செய்யும் தவறுகள் கணக்கில் அடங்காது.
ஒரு நல்ல மனிதர், மிருகக் காட்சிசாலைக்குச் சென்றார். தற்செயலாக ஒட்டகச்சிவிங்கி ஒன்று குட்டி போடுவதைக் கண்டுவிட்டு, பின்னர் ஒட்டகச்சிவிங்கிகளே, கடவுள் படைப்பில் மிக மோசமானதென்று கூறினார்.
ஏனென்று கேட்டபோது, அவர் கூறியதாவது:
தாயிடமிருந்து பிரிந்த குட்டி ஒட்டகச்சிவிங்கி, உலகத்தில் நுழையும்போது, சுமார், பத்தடி அல்லது மூன்று மீட்டருக்கு அதிகமான உயரத்திலிருந்து, தனது முதுகுப்புறமாகத் தரையில் தடாலென்று விழுகிறது.
ஒரு சில வினாடிகளில் சுதாரித்துக்கொண்டு, புரண்டு படுத்து பின்னர் தன் கால்களை உடலோடு ஒட்டிக்கொள்கிறது.
இந்த நிலையில் கிடக்கும் சில வினாடிகளில், தன் மேல், தலை மற்றும் கண் பாகங்களில் ஒட்டியுள்ள (தாயின் கர்ப்பப்பையில் உதித்த) திரவத்துளிகளை உதறித்தள்ளி சுத்தம் செய்துகொள்ள, தாயானது குனிந்து குட்டியை ஆராய்கிறது.
பிறகு, தன்னை ஒரு வசதியான நிலையில் இருத்திக்கொண்டு குட்டியை தன் கால்களால் ஒரு உதை கொடுக்க, குட்டியானது ஆகாயத்தில் தூக்கி எறியப்பட்டு தடாலென்று தரையில் விழுகிறது.
இந்தக் காட்சியை முதல் முதலாக காண்போரின் இதயத்துடிப்பு சில வினாடிகள் நின்றுவிடும்.
இப்போது, குட்டி தன் கால்களில் நிற்கவேண்டும். இல்லாவிட்டால், குட்டியை தாய் தன் காலினால் கடுமையாக உதைப்பது தொடரும். குட்டி களைத்துப் போனாலும் தாய் விடுவதில்லை. உதை தொடர்கிறது. கடைசியாக, குட்டி நடுங்கும் தன் கால்களில் நிற்க ஆரம்பிக்கிறது.
ஒட்டகச்சிவிங்கி ஏன் அப்படி கடுமையாக நடந்துகொள்கிறது? எல்லாம் ஒரு நல்ல காரணத்தோடுதான்.
ஒட்டகச்சிவிங்கியின் குட்டியை தின்ன பலவிதமான மிருகங்களுக்கு ஒரு தனிப்பட்ட ஆசை. இதனால் அதற்கு ஆபத்து அதிகம்.
ஆபத்தான நேரங்களில் ஒருசில வினாடிகளைக்கூட வீணாக்காமல், தன் காலில் எழுந்து, விரைவாக கூட்டத்துடன் சேராவிட்டால் குட்டி மற்ற மிருகங்களுக்கு இறையாகக்கூடும்.
தாயின் முதல் பரிசுதான் (உதை) வாழ்நாள் முழுவதும் நினைவில் நின்று, தன்னையும் தன் சந்ததிகளையும் உயிர் வாழ பயன்படுகிறது. இது மிருக அறிவியல் நிபுணர்களின் கூற்று.
ஒட்டகச்சிவிங்கி மாத்திரம் இல்லை, மனிதர்களுக்கும் தன் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் திட்டுவதில்லையா? தவறு செய்யும் மனிதர்களை திருத்த தண்டனைகள் மற்றும் சிறைவாசம் ஆகியவை கடுமையாகத் தெரிந்தாலும் அவர்கள் நலனுக்குத்தானே!
(உழைப்பதற்கு முன்னால் உட்காருவது ஓய்வு இல்லை.)

You must be logged in to post a comment Login