Q&A

கட்டுப்படுத்த முடியவில்லை…?

By  | 

கேள்வி:
என் வயது 27. சிறுநீரைக் கட்டுப்படுத்திக்கொள்ளச் சிரமப்படுகிறேன். இதனால் வெளியிடங்களுக்குச் செல்வதற்கு சங்கடமாக இருக்கிறது. தண்ணீர் அருந்தாமல் கட்டுப்படுத்தலாம் என்றாலும், அந்த உணர்வு ஏற்பட்டதும் உடனே வெளியேற்றிவிட வேண்டும். தண்ணீர் அருந்தாமல் இருந்தால் வேறு நோய்கள் வந்திடும் என்றும் பயமாக இருக்கிறது. இது ஏதும் வியாதியா?

பதில்:
வியாதி என்று முழுதாகச் சொல்லிவிட முடியாது. ஆனால், இதற்கு உடல், உள சிகிச்சைகள் உண்டு.

பொதுவாக, தும்மல், இருமல், வாய்விட்டுச் சிரித்தல் போன்ற சந்தர்ப்பங்களில் சிறுநீர் கசிவது, பெண்களுக்கு, அதுவும் பெரும்பாலும் முப்பது வயதைக் கடந்தவர்களுக்கே வரும். ஆனால், உங்களுக்கு இருப்பது வேறு விதமான பிரச்சினை. ஆர்த்தரைட்டீஸ், அல்சீமர் போன்ற குறிப்பிட்ட சில நோய்களுக்கு ஆளாகியவர்களுக்கு இந்தப் பிரச்சினை தோன்றலாம். ஆனால், உங்களைப் பொறுத்தவரையில் அம்மாதிரியான எந்தப் பிரச்சினையும் இல்லை என்று எண்ணத் தோன்றுகிறது. எனவே, உங்களது சிறுநீர்ப் பை தசைகள் பலமிழந்து போயிருக்கக் கூடும். அல்லது ஏதேனும் நரம்பு மண்டலப் பாதிப்புக்களும் இருக்கலாம். மருத்துவ பரிசோதனை செய்து சிகிச்சை பெற்றுக்கொள்வது நல்லது.

தற்காலிகத் தீர்வாக, நேரம் குறித்துவைத்து சிறுநீர் கழிக்க முயற்சி செய்யுங்கள். அதாவது, சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு தோன்றும் நேரத்தை அடிப்படையாக வைத்து, ஒவ்வொரு இரண்டு மணித்தியாலங்களுக்கு ஒரு முறை சிறுநீர் கழிக்கப் பழகுங்கள். நாளடைவில், அந்த நேரத்திற்கு சிறுநீர் வெளியேறப் பழகிவிடும். பின்னர், அந்த நேரத்தை இன்னும் சற்று அதிகரிக்கலாம்.

You must be logged in to post a comment Login