General

கருப்பின மக்களை அதிகமாகத் தாக்கும் கொரோனா!

By  | 

அமெரிக்காவில் வாழும் மக்களில் கொரோனா தொற்றால் அதிகமாக கருப்பின மக்களே பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் வாழும் வெள்ளையின மக்கள், ஆசிய நாட்டுகளைச் சேர்ந்தவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதை விட, இரண்டு மடங்கு அதிகமான கருப்பின மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஏபிஎம் ரிசர்ச் லேப் என்ற ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இதற்கு கருப்பின மக்கள் கொரோனாவைப் பற்றி அதிகம் கவலைப்படாததும் ஒரு காரணமாக இருக்கிறது. பொழுதுபோக்கு இடங்களில் கூடும் கருப்பின மக்கள் பலர் முகக்கவசம் அணியாமல் இருப்பதும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் இருப்பதும் காரணமாக இருக்கிறது. “எதையும் தாங்கும்” மனப்பான்மை கருப்பின மக்களுக்கு அதிகம் இருப்பதால், கொரோனா தொற்றின் தொடக்கநிலையிலேயே அவர்கள் மருத்துவமனைகளுக்கு வராமல் இருப்பதும் தொற்று அதிக அளவில் அவர்களைத் தாக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தருகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இன்னொருபுறத்தில் வெள்ளையின மக்களுக்குத் தரப்படும் அளவுக்குத் தரமான மருத்துவவசதிகள் கறுப்பின மக்களுக்குத் தரப்படுவதில்லை என்றும் இனரீதியான பாரபட்சம் காட்டப்படுவதாகவும், அதனால் கறுப்பின மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் அந்த ஆராய்ச்சி தெரிவித்துள்ளது.

 

You must be logged in to post a comment Login