Mother

கருவிலேயே குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்

By  | 

ஆய்வு முடிவுகள்

கொரோனா பெருந்தொற்று காலத்தில் பிறந்த குழந்தை மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசி எடுத்துக்கொள்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், அவர்களை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மிகவும் கவனமாக பாதுகாக்கவேண்டியது அவசியமாகிறது.

இந்நிலையில் அமெரிக்காவின் பிலடெல்பியாவில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையின், மருத்துவ வல்லுநர் Dr. டஸ்டின் பிளானரி மற்றும் அவரது குழுவினர் நடத்திய ஆய்வில், புதிய தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்கும் அன்டிபொடிகள் பெரும்பாலும் கர்ப்ப காலத்தில் தாயிடமிருந்து குழந்தைக்கு கிடைப்பது தெரியவந்துள்ளது.

இவ்வாய்வில் 1400 தாய்மார்கள் மற்றும் அவர்களின் பச்சிளம் குழந்தைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட அல்லது முன்னர் பாதிக்கப்பட்ட 83 கர்ப்பிணிப் பெண்களில் 72 பேரில், கொரோனாவை எதிர்க்கும் ஐ.ஜி.ஜி என்ற அன்டிபொடிகள், நஞ்சுக்கொடி முழுவதும் பரவியிருந்ததை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

இதனால் தாய்க்கு பாதிப்பு இருந்தாலும், அவரது குழந்தைக்கு குறைந்தபட்சம் சில பாதுகாப்பை இந்த அன்டிபொடிகள் வழங்கும். கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி போடுவது அவர்களின் பிறக்காத குழந்தைகளையும் பாதுகாக்கக்கூடும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். கர்ப்பிணிப் பெண்கள் தங்களையும் தங்கள் குழந்தைகளையும் பாதுகாக்க காய்ச்சல் தொடர்பான தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பிறந்த குழந்தைக்கு கொரோனா வைரஸ் நோயிலிருந்து பாதுகாப்பு அளிக்க, தாய்வழி பெறப்பட்ட குறிப்பிட்ட அன்டிபொடிகளின் திறனை தங்கள் கண்டுபிடிப்புகள் நிரூபித்திருப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட தாய்மார்களின் குழந்தைகளில் எந்த குழந்தைக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை. கொரோனா வைரஸூக்கு எதிரான அன்டிபொடிகள் உருவாகியிருந்த பெண்களில் 60% பேருக்கு எந்த அறிகுறியும் இல்லை என்றும் தெரிவித்தனர்.

கர்ப்ப காலத்தில் தாய்மார்களுக்கு தடுப்பூசி போடப்பட்டாலும் கூட, ஆறு மாதங்களில் குழந்தைகளுக்கு காய்ச்சலுக்கு எதிராக நோய்த்தடுப்பு மருந்துகளை செலுத்தும்படி அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் பரிந்துரை செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

You must be logged in to post a comment Login