Cinema

கவர்ச்சிக்கு புதுவிளக்கம் சொல்லும் வாமிகா கபி

By  | 

தமிழில் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி இயக்கத்தில் வெளியான மாலை நேரத்து மயக்கம் என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்தவர் வாமிகா கபி.. அதன்பின் தமிழில் வாய்ப்பில்லாத வாமிகா மலையாளத்தில் கோதா என்கிற மல்யுத்த வீராங்கனையாக நடித்து தனது முழு திறமையையும் வெளிக்காட்டி ஆச்சர்யப்படுத்தினார்.

Actress wamiqa

தற்போது மாயா இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில்  இறவாக்காலம்  என்கிற படத்திலும் நடித்துள்ளார்.

ஊரடங்கு நாட்கள் நீண்டுகொண்டே செல்வதால் ரசிகர்கள் தன்னை மறந்துவிட கூடாது என்பதற்காக, தற்போது தனது கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் வாமிகா. மேலும், “உடல்தோற்றத்தில் இருந்து வெளிப்படுவது அல்ல கவர்ச்சி.. அது உள்ளத்தில் எரியும் தீ” என கவர்ச்சிக்கு புது விளக்கமும் அளித்துள்ளார்.

You must be logged in to post a comment Login