Fashion

கவர்ச்சி காலணிகள்

By  | 

நமது உடலை தூக்கி சுமப்பது கால்கள். அந்த கால்களை பாதுகாப்பவை, காலணிகள். சுகாதாரமற்ற இடங்களில் நடக்கும்போது, கால்களை நோய்க்கிருமிகள் தொடுகின்றன. சரியாக பாதங்களை பராமரிக்காவிட்டால், அந்த நோய்க்கிருமிகளின் தாக்குதலுக்கு உள்ளாகுகிறோம். அதனால்தான் வெளியே சென்றுவிட்டு திரும்பியதும், கால்களை நன்றாக கழுவி சுத்தம் செய்துவிட்டு வீட்டிற்குள் செல்லும் பழக்கம் ஏற்பட்டது.

 

 

கடந்த காலங்களில் மனிதன் தமது பாரம்பரியம் பற்றி மறந்திருந்தாலும் கூட கொரோனா வைரஸின் வருகை மனிதனை வெகுகுவாக மாற்றியுள்ளது.

வெளியில் சென்று வந்தால் கை கால்களை கழுவுவது… பாதங்கள் முழுவதும் மூடிய வடிவிலான காலணிகளை அணிவது என மனிதனின் வாழ்க்கை முறை வெகுவாக மாறிவிட்டன.

இன்றைய நவீன உலகில் ஆண் பெண்க்கென தனித் தனி வடிவங்களில் காலணிகள் கிடைக்கின்றன. ஆடைக்கு ஏற்ற வகைகளில் எல்லாம் காலணிகளை அணிந்து அழகுபார்க்க முடிகிறது.

மிருகங்களின் தோலில் செய்யப்படும் காலணிகள் நீடித்து உழைக்கக்கூடியது. ஆனால் ஒரு சிலருக்கு அவைகளால் ஒவ்வாமை ஏற்படும்.

முரண்பாடான காலணியால் ஏற்படும் உபாதைகள் மூளை வரை சென்று ஒருவரின் மனநிலையை மாற்றும். உடலுக்கும் அசௌகரியங்களை ஏற்படுத்தும். அதை அவரது முகத்தை வைத்தே கண்டுபிடித்துவிடலாம். அதனால் கால்களுக்கு பொருத்தமான காலணிகளை தேர்வு செய்ய வேண்டியது மிக அவசியம்.

ஒருவரது காலணி இன்னொருவருக்கு பொருந்தும் என்று சொல்ல முடியாது. காலின் அமைப்பு என்பது உடலின் எடையை பொறுத்தது. எவ்வளவு அழகான காலணியாக இருந்தாலும் காலில் போட்டு கொஞ்சம் தூரம் நடந்து பார்த்துதான் தேர்ந்தெடுக்கவேண்டும்.

இங்கிலாந்து பிரபுக்கள் தங்கள் ஆடைகள் மண்ணில் புரளாமல் பாதுகாக்கவும், தங்களை உயர்குடி மக்கள் என்று காட்டிக்கொள்ளவும் விதவிதமாக பெரிய காலணிகளை அணிந்திருக்கிறார்கள்.
குள்ளமாக இருப்பவர்கள் சற்று தடிமனான காலணிகளை அணியலாம்.

அகலமான கால்களுக்கு டிசைன் போட்ட காலணிகள் சிறந்தது.

கால்களை பெரிதாகக் காட்ட பெரிய காலணிகளை வாங்கக்கூடாது. அது நடக்க சௌகரியமாக இருக்காது. அடர்ந்த நிறம் கொண்ட காலணிகளை அவர்கள் பயன்படுத்தவேண்டும்.

You must be logged in to post a comment Login