Interview

கவர்ச்சி பொம்மையாக வலம் வர விருப்பமில்லை!

By  | 

– அறிமுக நடிகை சாரா வெங்கடேசன்

‘பிக்பொஸ்’ போட்டியாளர்களான மஹத், யாஷிகா இணைந்து நடிக்கும், ‘இவன் தான் உத்தமன்’ என்ற படம் மூலம் தமிழ்திரையுலகிற்கு அறிமுகமாகும் சாரா வெங்கடேசன் உடன் ஒரு சந்திப்பு:

உங்களை பற்றியும், முதல் படம் பற்றியும் சொல்லுங்கள்?
நான் தெலுங்கு பெண். பெங்களூரில் வசிக்கிறேன். தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றுகிறேன். எங்கள் குடும்பத்தில் இருந்து, சினிமாவுக்கு வரும் முதல் நபர் நான். மஹத், யாஷிகா இணைந்து நடிக்கும ‘இவன் தான் உத்தமன்’  படத்தில், இரண்டு நாயகியரில் ஒருவராக நடிக்கிறேன்.இந்த படம், தமிழ், கன்னடம் என, இரண்டு மொழிகளிலும் வெளியாகிறது.

இந்த படம் எந்த மாதிரியான கதைக்களம்?

திகில் நிறைந்த த்ரில்லிங்கான கதை. இந்த படம், ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கும்.

சினிமாவுக்கு வரக் காரணம்?

சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது ஆசை. இதற்கு முன், குறும்படம் ஒன்றிலும் நடித்துள்ளேன். சினிமாவில் நல்ல கதைக்காக காத்திருந்த போது, இந்த படத்துக்கு தேர்வு நடப்பதாக அறிந்து, நானும் அதில் பங்கேற்று தேர்வானேன்.

எந்த மாதிரியான வேடத்தில் நடிக்க விருப்பம்?

நல்ல கேரக்டர்களை ஏற்று நடிக்க வேண்டும். கவர்ச்சி பொம்மையாக வலம் வர விருப்பமில்லை.

தமிழில் யாருடன் நடிக்க விருப்பம்?

சின்ன ரோல் கிடைத்தாலும், விஜய் படத்தில் நடித்து விட வேண்டும் என்பது, என் நீண்ட நாள் ஆசை.

அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி விட்டீர்களா?
தமிழ் படம் ஒன்றிலும், கன்னட படம் ஒன்றிலும் நடிக்க உள்ளேன். விரைவில் அறிவிப்பு வெளியாகும்.

தமிழ் கற்றுக் கொண்டீர்களா?

இப்போது தான் ஓரளவு கற்று வருகிறேன். விரைவில் நன்றாக தமிழ் பேசுவேன்.

 

 

You must be logged in to post a comment Login