Gallery

காதலரை கரம்பிடித்தார் பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால்.!

By  | 

இந்தியாவின் முன்னணி வீராங்கனையான சாய்னா நேவால், பாருபள்ளி காஷ்யப்பை திருமணம் செய்து கொண்டார்.

இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையாக திகழ்ந்து வருபவர் சாய்னா நேவால். அதேபோல் சிறந்த வீரர் பாருபள்ளி காஷ்யப். இருவரும் காதலித்து வருவதாகவும், திருணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் என்றும் செய்திகள் வெளிவந்தன.

கடந்த செப்டம்பர் மாதம் நாங்கள் இருவரும் காதலித்து வருவது உண்மைதான். டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொள்ள இருக்கிறோம் என்று சாய்னா தெரிவித்தார்.

சாய்னா, திடீரென நேற்று திருமணம் செய்துள்ளதாக அறிவித்துள்ளார். திருமணத்தின் போது, குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சாய்னா ட்விட்டரில் பதிவிட, அதை ரசிகர்கள் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.

 

 

 

You must be logged in to post a comment Login