
Love
காதலிக்காக மொட்டையடித்து கொண்ட காதலன்
-உருக வைக்கும் வீடியோ
அலோபீசியா நோயால் பாதிக்கப்பட்ட காதலிக்கு மொட்டை போடும் காதலன், உண்மையான காதலை வெளிப்படுத்த தானும் மொட்டையடித்து கொள்ளும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அமெரிக்காவை சேர்ந்த பிரபல முன்னாள் கூடைப்பந்து வீரரான ரெக்ஸ் சாப்மேன் தனது டுவிட்டர் பக்கத்தில், அவருடைய காதலி அலோபீசியா காரணமாக முடி உதிர்வால் சிரமப்பட்டு வருகிறார் என வீடியோ ஒன்றை பதிவிட்டார்.
சுமார் ஒரு நிமிடம் ஓடும் வீடியோவில், சோகத்தில் அமர்ந்திருக்கும் காதலிக்கு மொட்டை போடும் இளைஞர், தன்னுடைய தலையில் உள்ள முடியை அகற்றுகிறார். காதலிக்கு ஆதரவாக இருப்பதை உணர்த்துவதற்காக தனக்கு தானே மொட்டை போட்டு கொள்கிறார். இதனை கண்டு காதலி ஆனந்த கண்ணீர் விடுகிறார்.
அலோபீசியா என்பது நோய் எதிர்ப்பு சக்தி குறைப்பாட்டால் முடிகள் வலுவிழந்து உதிர்வதாகும். சில நேரங்களில் இது சிறிய திட்டு போன்று இருக்கும். மற்ற நேரங்களில் திட்டுகள் பல சேர்ந்து முடி உதிர்ந்து வழுக்கையாக மாறும்.
குறிப்பிட்ட இந்த காதல் ஜோடிகளின் வீடியோ டுவிட்டரில் 3.3 மில்லியன் பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது. சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர். இதேபோன்று தனது அன்பானவர்களுக்காக தாங்கள் செய்ததையும், வழுக்கையாக இருப்பதும் அழகு தான் என பலர் தங்களது புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.
His girlfriend was struggling with her hair loss from alopecia.
Get out the tissues.
Humanity.🌎❤️ pic.twitter.com/EikwKnlACo
— Rex Chapman🏇🏼 (@RexChapman) July 29, 2020
‘அலோபீசியாவால் ஒருபோதும் அவர்களின் மதிப்பை குறைக்காது. அவள் எப்போதும் சரியானவளாகவும் அழகாகவும் இருப்பாள். நான் ஒரு வயதிலிருந்தே பாதிக்கப்பட்டேன். 4 வயதில் முழு வழுக்கை அடைந்தேன். முயற்சிக்கும் குழந்தைப்பருவம், உண்மையில், ஆனால் நாம் எதையும் வெல்ல முடியும். ஒரு நடிகராக, விழிப்புணர்வைக் கொண்டுவர நான் வெற்றி பெற விரும்புகிறேன். வழுக்கை அழகாக இருக்கிறது’ என ஏஞ்சல் ரோசாரியோ என்பவர் தனது புகைப்படத்துடன் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
You must be logged in to post a comment Login