Love

காதலின் சந்தம்

By  | 

நிசப்தமான இரவுகளில்
நெஞ்சை வருடும்
உன் நினைவுகள்…..

வானத்து நிலாவில்
வண்ண ஓவியமாய்
உன் முகம்….

கருங்குயில் ஒலிக்கும்
கீதமெல்லாம்
காதலின் நாதமாய்
காதுகளில்….

ஆந்தையின் அலறலும்
கோட்டாவின் குமுறலும்
பாடலாய் என் முன்…..

இந்த இரவு
ஏன் என்னை
இப்படி வதைக்கிறது?

விடை தேடினேன்
அலைபேசியில்
உனது குரல்……

தூக்கம் வரவில்லை
தூரத்து நிலவு
சுடுகிறது என்றாய்

அதே நோய் தான்
என்னையும்
ஆட்டிப் படைக்கிறது
என்றேன்

சிங்கார சிரிப்பு
சிந்திச் சிதற
மௌனமானாள்

அந்த
சிரிப்பின் குறும்பும்
மௌனத்தின் தவிப்பும்
ஏதோ ஒன்றைச்
சொல்ல……

உள்ளங்கள் மட்டும்
ஆயிரம் பாஷைகளை
பேசிக்கொள்ள
அந்த இரவு
இன்னும் அழகானது!

– ஆ.விஜிதா ,
கல்முனை.

You must be logged in to post a comment Login