Cinema

காதலியை கரம் பிடித்தார் நடிகர் அதர்வாவின் தம்பி

By  | 

மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனும் நடிகர் அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் – மாஸ்டர் படத் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவின் மகளும் எஸ்.ஏ.சி.யின் தங்கை மகளுமான இயக்குநர் சினேகா (சட்டம் ஒரு இருட்டறை 2 இயக்குநர்) ஆகிய இருவரும் காதல் திருமணம் செய்துள்ளார்கள்.

ஆகாஷ் – சினேகாவின் திருமணம் நிச்சயதார்த்த நிகழ்ச்சி சென்னையில் லீலா பேலஸ் ஹோட்டலில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது.

இந்நிலையில் இருவருக்கும் கடந்த ஒகஸ்ட் 24 அன்று திருமணம் நடைபெற்றுள்ளது. சென்னையில் நடைபெற்ற திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளார்கள்.

இதுபற்றி தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவும் நடிகர் அதர்வாவும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தற்போதைய சூழலால் திருமணத்தை நெருங்கிய நண்பர்கள் மற்றும் இரு குடும்பச் சொந்தங்கள் மட்டுமே பங்கேற்று நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. நிலைமை சரியானவுடன் திரையுலக நண்பர்கள், ஊடக நண்பர்கள் என அனைவரையும் அழைத்து ஒரு பிரமாண்ட வரவேற்பு விழா செய்திட திட்டமிட்டுள்ளோம் என்று கூறியுள்ளார்கள்.

You must be logged in to post a comment Login