Cinema

காதல் திருமணம் தான்!

By  | 

விஷாலின், சக்ரா, மாதவனின், மாறா படங்களில் நடித்து வரும், ஸ்ரத்தா ஸ்ரீநாத், தனக்கு திருமணமானால், அது காதல் திருமணமாக தான் இருக்கும் எனக், கூறியுள்ளார்.
மேலும், லவ் என, தன் மார்பில் பச்சை குத்தியுள்ள ஸ்ரத்தா, யாரிடமாவது காதல் வலையில் வீழ்ந்துள்ளாரா என, தெரியவில்லை.

இது குறித்து அவர் கூறுகையில்:
ஆணாதிக்கம் மிகுந்த சினிமாவில், நயன்தாரா, சமந்தா சாதித்து, நிலைத்திருப்பது பெரிய விஷயம். இதுபோல், பலர் உயர்ந்துள்ளனர். அவர்களை போல் சாதிக்க வேண்டும். எனக்கு வரப்போகும் கணவர், என்னையும், நான் அவரையும் புரிந்து கொள்ள வேண்டும். அதனால், காதல் திருமணம் தான் செய்வேன் என, கூறியுள்ளார்.

You must be logged in to post a comment Login