Love

காதல் பிட்ஸ்!

By  | 

மாவீரன் நெப்போலியன் தன் காதலி ஜோசப்பைனுக்கு எழுதிய காதல் கடிதங்கள் உலகப்புகழ் பெற்றவை. திருமணம் முடித்த கையோடு போர் முனைக்கு சென்றவர், அங்கிருந்து தன் காதலிக்கு எழுதிய கடிதங்கள் ஒன்றல்ல, இரண்டல்ல ஐயாயிரமாகும்.

டிராபிரண்ட் என்ற தீவில் வாழும் காதலன் தனது காதலியின் கன்னத்திலோ உதட்டிலோ முத்தமிடக்கூடாது. அப்படிச் செய்வது கற்பழிப்பதற்கு சமம்.

பினிசீயா நியர்சிடிகா என்ற ஒரு வகை வண்டின் பெயர் லவ்பக். அதாவது காதல் வண்டு. இது தன் வாழ்நாளில் பாதியைப் பெண் வண்டைக் காதலிப்பதிலேயே கழித்துவிடுமாம்.

ஜெர்மனியில் உள்ள சிறைகளில் காதலர்கள் அறை என்று தனியாக ஓர் அறை ஒதுக்கப்பட்டுள்ளது. சிறை கைதிகளும் தங்கள் காதலிகளுடன் தனியாக சில மணிநேரம் இருப்பதற்குதான் இந்த ஏற்பாடு.

ரோம் நாட்டில் லூப்பர் கேலியா தினத்தன்று இளைஞர்கள் தான் விரும்பும் பெண்ணின் பெயரை துணியில் எழுதி முழங்கையில் கட்டிக்கொள்வர். அவர்களின் காதலை ஏற்பதும் நிராகரிப்பதும் பெண்களின் விருப்பம்.

அயர்லாந்து நாட்டில் டப்ளின் நகரில் உள்ள டப்ளின் தேவாலயத்தில், காதலர் தினத்தன்று காதலர்கள் மோதிரம் மாற்றிக்கொண்டால் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.

அமெரிக்காவின் நியூஜெர்மனி மாநிலத்தில் பாக்வின் நகரில் உள்ள தேவாலயத்தில் இருபது கிலோ தங்கத்தில் இதய வடிவம் ஒன்றை வைத்திருக்கிறார் விக்டர் ஜாம்ஸீகன் என்பவர். இத்தேவாலயத்தில் காதலர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

புகழ்பெற்ற இத்தாலிய நாட்டுக் கவிஞர் தாந்கே தனக்கு 9 வயதாக இருந்தபோது தன் வயதையொத்த பேட்ரிக் என்ற சிறுமியிடம் மனதை பறிகொடுத்தார். ஆனால், துரதிர்ஷ்ட வசமாக 12 வயதில் இந்த சிறுமி இறந்துபோய்விட காலமெல்லாம் அந்தப் பெண்ணை நினைத்து காதல் கவிதைகளை வடித்தார்.

ஜெர்மன் நாடகாசிரியரும் கவிஞருமான கதே 200 பெண்களை காதலித்ததால், அவர் காதல் மன்னன் என்ற பெயர் பெற்றார்.

பிரெஞ்சு நாவலாசிரியரான விக்டர் யுகோவின் காதலி ஜூலியெட் ட்ரூவெட் ஒவ்வொரு நாளும் யுகோவுக்கு 17 ஆயிரம் காதல் கடிதங்களை எழுதியுள்ளார். ஆனால், இருவரும் திருமணம் செய்துகொள்ளவில்லை.

You must be logged in to post a comment Login