Children

குட்டி தமிழச்சியின் காணொளிப் பகிர்வு

By  | 

சமீப காலமாக ஃபேஸ்புக், யூடியூப் முதலிய சமூக ஊடகங்களில் தொடர்ந்து தனது காணொளிகளை பதிவிட்டு வருவதன் மூலம் உலக தமிழர்களின் மனங்களில் நெருக்கமாகிவிட்ட ஒரு குட்டி தமிழச்சியின் காணொளி பற்றிய பகிர்வே இது.

தமிழகத்தின் பெரம்பளூரைச் சேர்ந்தவர் லத்திகா ஸ்ரீ. 8 வயதேயான இந்த சிறுமி தனது அழகிய பேச்சாலும், சீரான தமிழ் சொற்பிரயோகங்களாலும், உண்மை பொதிந்த பொதுவுடமை கருத்துக்களாலும் எண்ணற்றவர்களை கவர்ந்துள்ளார்.

‘தமிழ் மகள்’ ஃபேஸ்புக் தளத்தில் இவர் பதிவிட்டுள்ள காணொளிகளில் எண்ணிக்கை ஐம்பதைக் கடந்துள்ளது. அவ்வாறு அவர் பதிவிடுகின்ற ஒவ்வொரு காணொளியிலும் மறக்காமல் ஒரு திருக்குறளை கூறி, அதன் அர்த்தத்தை விளக்கி, சமூக சிந்தனைமிக்க கருத்துக்களை பகிர்ந்து கொள்வதுதான் இவரது தனிச்சிறப்பு.

தமிழ் மரபு, பண்பாடு, வாழ்க்கை முறை, பாரம்பரியம், தனிமனித ஒழுக்கம், சமூகத்தின் பொறுப்பு, உலக நிலவரம் முதலிய விடயங்களை உள்ளடக்கிய இவரது காணொளிகளுக்கு ஏராளமான கருத்துக்கள், பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் குவிந்தவண்ணமுள்ளன.

எமது மித்திரன் இணையதளத்திற்கு லத்திகா ஸ்ரீ  வழங்கிய காணொளிகள் இங்கே உங்கள் பார்வைக்கு…

இவரது நேர்காணலை இவ்வார (31.05.2020) மித்திரன் வாரமலரில் காணலாம்.

 

You must be logged in to post a comment Login