Astrology

குழந்தையின்மைக்கு தீர்வு சொல்லும் சீரோ எண்கணிதம்

By  | 

இன்றைய சூழலில் பெண்கள் பொருளாதார ரீதியில் பாதுகாப்பான இடத்துக்கு உயர்ந்த பின்னரே தங்களது திருமணம் குறித்து சிந்திக்க தொடங்குகிறார்கள். அதற்குள் அவர்களின் வயது, முப்பதை கடந்துவிடுகிறது. அதற்குப் பிறகு சரியான துணையைத் தேடி, திருமணம் செய்துகொண்ட பின்னர், அவர்கள் குழந்தைப்பேறு விடயத்தில் விவரிக்க இயலாத இடையூறுகளையும் எதிர்மறையான விமர்சனங்களையும் எதிர்கொள்கிறார்கள்.
சிலர் திருமணத்துக்குப் பிறகு ஓராண்டு காலம் வரை தாம்பத்திய உறவில் ஈடுபட்டுக்கொண்டே மக்கட்பேறு குறித்த எதிர்பார்ப்பை வளர்த்துக் கொள்கிறார்கள் அல்லது காத்திருக்கிறார்கள். எதிர்பார்த்த நேர்மறையான பலன்கள் கிடைக்கவில்லை என்றால், மகப்பேறு மருத்துவ நிபுணர்களை அணுகி செயன்முறைக் கருத்தரிப்பு குறித்த சிகிச்சைக்கு தங்களை மனதளவில் தயார்படுத்திக்கொள்கிறார்கள். ஆனால், இவர்கள் சதவீத அளவில் குறைவானவர்களாகவே இருக்கிறார்கள். பெரும்பான்மையானவர்கள் காரணத்தை கண்டறிவதில் மருத்துவரின் உதவியை நாடுகிறார்கள். பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்குப் பிறகு, அவர்கள் இருவருக்கும் குழந்தை பெற்றுக்கொள்வதில் எந்தவித தடைகளும் அறிவியல் ரீதியாக இல்லை என முடிவு தெரிய வருகிறது. இத்தகைய முடிவுக்கு பின்னர் அவர்கள் காத்திருக்க தொடங்குகிறார்கள்.


இந்த தருணத்தில் அவர்கள் ஆன்மிகம், சோதிடம் மற்றும் வேறு வகையான உளவியல் சார்ந்த மருத்துவ முறைகளை பற்றி அறிந்துகொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள்.
இதன்போது சீரோ எண்கணித ஜோதிடம் மற்றும் அதன் சூட்சும பலன்கள் குறித்து அறிந்துகொள்ளும் வாய்ப்பு அவர்களுக்கு கிட்டுகிறது. இத்தகைய எண்கணித சோதிடம் 18ஆம் நூற்றாண்டிலிருந்து தொடர்ச்சியாக மேலைத்தேய நாடுகளில் வழக்கத்தில் இருக்கிறது என்பதும், இதனுடைய சூட்சுமமான பலன்கள் துல்லியமாக பலிதமாகுவதால் இந்த எண்கணித சோதிட நிபுணர்களை அணுகி தங்களுக்கு தீர்வளிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுக்கிறார்கள்.
எண்சோதிட நிபுணர்கள், கணவன் மற்றும் மனைவியின் பெயர், இருவரின் பிறந்த திகதி, பிறந்த மாதம், பிறந்த ஆண்டு, பிறந்த இடம், பிறந்த நேரம், திருமணம் நடைபெற்ற திகதி, திருமணம் நடைபெற்ற இடம் என பல்வேறு தகவல்களை திரட்டி, அதனை உற்றுநோக்கி ஆராய்ந்து, அவர்களின் வினாக்களுக்கான விடைகளை சூட்சுமமான முறையில் அறிந்து விளக்கமளிக்கிறார்கள்.
இதன்போது அவர்கள் பயன்படுத்தும் கைப்பேசி எண்கள், வாகன எண்கள், அவர்களின் வணிக நிறுவனத்தின் பெயர், வணிகம் உள்ளிட்ட வேறு சில பிரத்தியேக அம்சங்களையும் கவனத்தில் கொண்டு தீர்வினை முன்வைக்கிறார்கள். அத்துடன் அவர்களின் ஜாதகத்தில் லக்னத்துக்குரிய சந்தான பாக்கியம் அம்சம் பெற்ற கிரகம் எது என்பதையும் அறிந்து, அதனை வலிமைப்படுத்தும் காரணி எதுவென்பதையும் ஒப்பிட்டு, இந்த எண்கணித முறையில் பலன்களை சொல்கிறார்கள்.
குழந்தைப்பேறை வழங்குவதில் ஜாதக ரீதியாக குருவும் சுக்கிரனும் வலிமை பெற்றிருக்க வேண்டும். இதற்கு ஏற்ற வகையில் அவர்களின் பெயர், பயன்படுத்தவேண்டிய வாகனத்தின் எண், பயன்படுத்தவேண்டிய கைப்பேசி எண் உள்ளிட்ட சிலவற்றை சூட்சுமமாக அறிந்துகொண்டு அவர்களுக்கு விபரிக்கிறார்கள்.
உதாரணத்துக்கு ஒரு தம்பதியினர் திருமணம் நடந்து ஏழு ஆண்டுகளாகியும் அவர்களுக்கு மழலைப்பேறு கிட்டவில்லை. மருத்துவ பரிசோதனையின்போது அவர்களுக்கு எந்த கோளாறுகளும் இல்லை என்று கண்டறியப்பட்டது. இந்நிலையில் இவர்கள் சீரோ எண்கணித ஜோதிட நிபுணர் ஒருவரை அணுகி, இது தொடர்பாக தங்களது கவலையை தெரிவித்திருக்கிறார்கள்.
சோதிடர் ~நீங்கள் வைர நகைகளை அணிவீர்களா…| என கேட்டிருக்கிறார். அதற்கு அவர்கள் ~ஆம், அணிந்திருக்கிறோம்| என்றுள்ளனர். ஆனால், அவர்களின் எண்கணித பொருத்த பலன்களின்படி வைரம் பலனளிக்காது என்பதும், அது எதிர்மறையான பலன்களை வழங்கும் என்பதையும் கண்டறிந்து தெரிவித்திருக்கிறார். அத்துடன் குறுகிய காலம் வரை வைரத்தை அணியவேண்டாம் என அறிவுறுத்தியிருக்கிறார்.
அவர்களும் ஒன்றரை ஆண்டு காலம் வரை வைரத்தை ஆபரணமாக அணியவில்லை.
இந்த தருணத்தில் அந்தப் பெண் இயற்கையான முறையில் கருவுற்று, அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
ஆகவே, சிலரது மக்கட்பேறின்மைக்கு அவர்கள் அணியும் நகைகளே காரணமாகிவிடுகின்றன. இதனால் சுக்கிரன், குரு தொடர்பான எந்தவொரு விடயத்தையும் குழந்தைப்பேறு அடைவதற்காக காத்திருக்கும் தாய்மார்கள் மற்றும் தம்பதியினர் உரிய நகைகளை தொடர்ந்து பயன்படுத்துவதற்கு சோதிடர்களிடம் குறிப்பாக சீரோ எண்கணித சோதிடரிடம் ஒருமுறை ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது.

You must be logged in to post a comment Login