Fashion

கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் எண்ணெய்கள்!

By  | 

“கூந்தல்” என்பது ஒவ்வொருவருக்கும் எவ்வளவு முக்கியம் என்பதை சொல்ல தேவையில்லை. முகத்தின் அழகு கூடுவதற்கு காரணமே நம் கூந்தல் தான்.

அவ்வாறான கூந்தலை பாதுகாக்க நாம் தவறாது எண்ணெய் தேய்க்க வேண்டும்.

என்ன எண்ணெய் தேய்க்கலாம் என சிந்திக்கின்றீர்களா…? உங்கள் தெரிவுக்கு படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

 

நெல்லிக்காய் எண்ணெய்:

நெல்லிக்காயில் முடியின் இயற்கை தன்மையை பாதுகாக்கும் சக்தி அதிகம் உள்ளது. அதிலும் இந்த எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால், அது ஒரு ஹேர் கண்டிஷனர் போன்று இருப்பதோடு, முடியின் கருமையையும் அதிரிக்கும்.

 

தேங்காய் எண்ணெய்:

இது முடிக்கு பொலிவைத் தருவதோடு, மயிர்க்கால்களை வலுவாக்கி, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும்.

 

பாதாம் எண்ணெய்:

பாதாம் எண்ணெயில் முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும் “விட்டமின் ஈ” அதிகம் உள்ளது. அது அடர்த்தி குறைத்த எண்ணெய் தான். இதனை தினமும் பயன்படுத்தினால், முடியின் வளர்ச்சி அதிகமாக இருப்பதோடு, அடத்தியாகவும் இருக்கும்.

 

மருதாணி எண்ணெய்:

மருதாணி எண்ணெய் ஒரு நேச்சுரல் கண்டிஷனர் மற்றும் பொடுகுத் தொல்லையை நீக்கக்கூடியது. எனவே முடி நன்கு பட்டுப் போன்றும், பொலிவோடும், பொடுகுத் தொல்லையின்றியும் இருக்கும்.

You must be logged in to post a comment Login