Beauty

கைகளை அழகு படுத்த வழிகள்

By  | 

ஈரப்பதம் கைகளை எப்போதுமே ஈர்ப்பத்துடனே வைத்து கொள்ள வேண்டும். அதற்காக வாரத்திற்கு 2 முறை கற்றாழை ஜெல்லை கைகளில் தடவலாம். இல்லையேல் தினமும் தேங்காய் எண்ணெய் போன்றவற்றை கைகளில் தடவி மென்மையாக வைத்து கொள்ளலாம்.

அழுக்குகளை அகற்ற கைகளில் உள்ள அழுக்குகளை அகற்றினாலே கைகள் மிகவும் மிருதுவாகவும் இளமையாகவும் மாற கூடும்.

தேவையானவை

மஞ்சள் கரு 1
எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்
அவகேடோ பழம் பாதி

தயாரிப்பு முறை: முதலில் அவகேடோ பழத்தை நன்றாக மசித்து கொள்ள வேண்டும். அடுத்து இவற்றுடன் மஞ்சள் கரு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும். இந்த கலவையை கைகளில் தடவி 20 நிமிடத்திற்கு பின் கைகளை கழுவவும். இந்த குறிப்பை வாரத்திற்கு 1 முறை செய்து வந்தால் கைகள் இளமையாகவே இருக்கும்.

பட்டு போன்ற கைகள் கைகளை தொட்டாலே பட்டு போன்ற உணர்வு ஏற்பட வேண்டுமா?

அதற்கு எளிய வழி இது தான். ஒலிவ் எண்ணெய் மற்றும் சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து கைகளில் தடவினால் கைகள் பட்டு போன்று மிருதுவாக இருக்கும். மேலும், உங்களின் கைகளை அழகாகவும் மாற்றும். வெண்மை பெற கைகள் மிகவும் வெண்மையாக இருக்க சிட்ரஸ் வகை பழங்களே போதும். சிட்ரஸ் வகை பழங்களை சாப்பிட்டு வந்தாலே பலவித பயன்கள் உங்களுக்கு கிடைக்கும். மேலும், இவற்றை கைகளில் எண்ணெய்யுடன் சேர்த்தும் தடவலாம்.

இளமையான கைகளுக்கு கைகளை இளமையாக வைக்க பல வழிகள் உள்ளது. அவற்றில் இந்த வழி மிகவும் பிரமாதமானது.

தேவையானவை
பால் 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்
தேன் 1 ஸ்பூன்

தயாரிப்பு முறை: முதலில் எலுமிச்சை சாற்றை தேனுடன் கலந்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் பாலை சேர்த்து கைகளில் தடவி நன்றாக மசாஜ் செய்யவும். இவ்வாறு செய்து வந்தால் கைகள் இளமையாக இருக்கும். மேற்சொன்ன வழிகளை தொடர்ந்து செய்து வந்தாலே நல்ல பலனை அடையலாம்.

You must be logged in to post a comment Login