Fashion

கொரோனா மாஸ்கிலும் ஃபெஷன்..!

By  | 

பொதுவாக அமெரிக்க ஃபெஷன் உலகில் ஆண்டுதோறும் இந்த மாதம்தான் அதிகமாக களைகட்டும். கடந்த ஆண்டு இந்த சமயத்தில் ஃபெஷன் உடை தயாரிப்பு நிறுவனங்கள் விதவிதாமன ஃபெஷன் உடைகளை தயாரித்து விற்பனை செய்து வந்தன. தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்ததன் காரணமாக ஃபெஷன் துறை முடங்கி உள்ளது.

கடும் நஷ்டத்தில் உள்ள அமெரிக்க ஃபெஷன் துறை தற்போது கொரோனா வைரஸ் பரவலை அடுத்து புதிய தொழிலில் இறங்கி உள்ளது.

அந்த வகையில் கொரோனா மாஸ்க், பாதுகாப்பு உடைகள் தயாரித்து விற்பனை செய்துவரும் அமெரிக்க ஃபெஷன் துறை அதில் அதிக லாபம் ஈட்டுகிறது. மிந்த்ரா, பேப் அலே, லீ கூப்பர் உள்ளிட்ட ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் கொரோனா மாஸ்க் மற்றும் உடைகளில் ஃபெஷனை புகுத்தி உள்ளன.

அதன்படி டிசைனட் மாஸ்க், டிரான்ஸ்பரண்ட் கோட் ஆகியவற்றைத் தயாரித்துள்ளன. இதனை அணியும் ஃபெஷன் பிரியர்கள் கொரோனா காலத்திலும் தங்களது ஸ்டைல் ஸ்டேட்மெண்டை பாதுகாக்கின்றனர். மாஸ்க் டிசைனில் பல விதங்களை லீ கூப்பர் அறிமுகப்படுத்தி உள்ளது. நம் அணியும் டிசைனர் டை, சொக்ஸ் போல மாஸ்கில் பல வண்ணங்கள் வந்துவிட்டன. இவை இளம்பெண்களை அதிகமாக கவர்ந்துள்ளன.

 

You must be logged in to post a comment Login