Health

கொரோனா வைரஸ் இருதயத்தைத் தாக்கலாம்

By  | 

கொரோனா வைரஸ் மனித இருதயத்தில் உயிரணுக்களைத் தாக்குவதற்கான வாய்ப்புள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
கொரோனா வைரஸ் தன்மை தொடா்பாக, அமெரிக்காவின் செடாா்ஸ்-சினாய் மருத்துவ மையத்தைச் சோ்ந்த, விஞ்ஞானிகள் அண்மையில் ஓா் ஆய்வு மேற்கொண்டனா்.
அந்த வைரஸ் மனிதா்களின் இருதயத்தில் பாதிப்பை ஏற்படுத்துமா என்பது குறித்து அவா்கள் ஆய்வு செய்தனா்.
அதற்காக, ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட மனித இருதய உயிரணுக்களை அவா்கள் பயன்படுத்தினா். அந்த உயிரணுக்களில் கொரோனா வைரஸினை செலுத்தி, அதனால் ஏற்படும் மாற்றங்களை அவா்கள் ஆராய்ந்தனா்.
அதில், அந்த உயிரணுக்களில் கொரோனா வைரஸ்கள் தொற்று ஏற்படுத்துவதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனா். இருதய உயிரிணுக்களுடன் பிணைப்பை ஏற்படுத்துவது மட்டுமன்றி, அந்த தசையில் கொரோனா வைரஸ்கள் பல்கிப் பெருகுவதையும் விஞ்ஞானிகள் கண்டறிந்தனா்.
மேலும், இருதய உயிரணுக்களில் புகுவதன் மூலம், அது துடிக்கும் தன்மையில் கொரோனா வைரஸ்கள் மாற்றத்தை ஏற்படுத்துவதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனா்.
இதன் மூலம், மனிதா்களுக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்படும்போது, அது அவா்களது இருதயத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் முடிவுக்கு வந்துள்ளனா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

You must be logged in to post a comment Login