Antharangam

சத்திர சிகிச்சை செய்து கொள்ளுங்கள்

By  | 

கேள்வி:

எனக்கு 21 வயது. எனது ஆணுறுப்பின் முன்புறத் தோல் பகுதியில், ஒரு சிறு பகுதி ஒட்டியபடி உள்ளது. இதனால், ஆணுறுப்பை முன்னும் பின்னும் இழுக்க முடியாமல் இருக்கிறது. ஏன் இப்படி இருக்கிறது? இதனால் பிரச்சினை தோன்றுமா? இதைச் சரி செய்ய என்ன செய்யலாம்?

பதில்:

21 வயது வரை நீங்களோ அல்லது சிறு வயதில் உங்கள் பெற்றோரோ இந்தப் பிரச்சினையைக் கண்டறியாமல் விட்டது எப்படி என்று தெரியவில்லை. சிறு வயதிலேயே இதற்கான தீர்வைக் கண்டிருக்கலாம். ஆனால், இப்போதும் ஒன்றும் தாமதம் இல்லை.

இது பிறவியிலேயே சிலருக்கு வருவதுதான். இதற்கு மிகச் சிறிய ஒரு சத்திர சிகிச்சையே போதுமானது. இதற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் மருத்துவமனையில் தங்கவேண்டிவரும். இதைப் பெரும்பாலும் ‘கொஸ்மெடிக் சேர்ஜரி’ மூலமும் செய்யலாம். அல்லது ஒரு சத்திர சிகிச்சை நிபுணர் மூலமும் செய்துகொள்ளலாம். லேசர் சிகிச்சை மூலம் செய்யலாம் எனினும், அதில் சில வேளை பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, சத்திர சிகிச்சையே நல்லது.

மேலும், இதற்கான சிகிச்சையைச் செய்துகொள்வதற்குக் காலம் தாமதிக்க வேண்டாம். முடிந்தளவு விரைவாகவே இதைச் செய்துகொள்ளுங்கள். இத்தகைய சிகிச்சைகளை, அரசாங்க வைத்தியசாலைகளிலேயேகூடச் செய்வார்கள். யாழ்ப்பாணத்தில் இந்த வசதி இருக்கிறதா என்பது பற்றி, நீங்கள்தான் வைத்தியரிடம் ஆலோசனை பெற வேண்டும்.

மேலும், இந்தத் தோல் பகுதி அகற்றப்பட்டபின், உங்களுக்குத் திருமண வாழ்வில் ஏதும் பிரச்சினை வருமோ என்று பயம் கொள்ளத் தேவையில்லை. இது ஒரு மேலதிக சதை வளர்ச்சியே. இதை அப்புறப்படுத்துவது மிக எளிதானது. உடனடியாகச் செய்துகொள்ளுங்கள்.

You must be logged in to post a comment Login