Women Achievers

சமூக வலைதளத்தில் புதிய சாதனை படைத்த பெண்!

By  | 

 சோஷியல் மீடியா எனும் சமூக வலைதளங்கள் தற்போது மக்களிடைய பிரபலமாகி வருகிறது. இதன் மூலம் அவரவர் தங்களது எண்ணத்தை வெளியிடவும், தங்களது கற்பனையை பகிர்ந்து கொள்ளவும் தளம் அமைத்துக் கொள்கின்றனர்.

அந்த வகையில், டிக்டாக், டப்ஸ்மாஷ், இன்ஸ்டா போன்றவற்றின் மூலம் வெளி உலகத்துக்கு அறிமுகமாகி பிரபலங்களும் ஏராளம்.

பல நாடுகளிலும் டிக்டாக் தடை செய்யப்பட்டாலும், உலகின் பல்வேறு பகுதிகளில் இளைஞர்களிடையே டிக்டாக் மோகம் குறையவில்லை. தங்களது கற்பனைக்கு லைக், கமெண்ட், பாராட்டுகள் கிடைப்பதால் இதனை பலரும் விரும்புகின்றனர்.

அந்த வகையில் அமெரிக்காவைச் சேர்ந்த பதினாறு வயதான சார்லி டி அமெலியோ ஒன்றரை ஆண்டில் 100 மில்லியன் ஃபாலோயர்களை பெற்று டிக்டாக் உலகில் புதிய சாதனை படைத்துள்ளார்.

ஆம், அமெலியோ நடன விடியோக்களால் புகழடைந்தவர். அவரது நடன விடியோக்களைப் பார்ப்பதற்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இந்த சாதனையை அமெலியோ புரிந்துள்ளதே அவரது தனித்துவம்.

2019-ஆம் ஆண்டு மே மாதம் முதல் டிக்டாக்கில் விடியோக்களை பதிவேற்றம் செய்ய ஆரம்பித்தார் அமெலியோ. அது இன்று 100 மில்லியன் ஃபாலோயர்களைக் கடந்துள்ளது என்பது அத்தனை எளிதான காரியமல்ல என்கிறார்கள் சமூக வலைதள பிரியர்கள்.

பிரபல ஹொலிவுட் நடிகர்களான வில் ஸ்மித்தை விட இரு மடங்கு அதிகமாகவும், ராக்-கை விட 3 மடங்கு அதிகமாகவும், செலினா கோமஸை விட 4 மடங்கு அதிகமாகவும் ஃபாலோயர்களை டிக்டாக்கில் தனக்கென உருவாக்கி அமெரிக்கா முழுவதும் உள்ள இளைஞர்களால் கொண்டாடப்படுகிறார் அமெலியோ.

தற்போது, பல்வேறு ஹொலிவுட் பிரபலங்களுடன் இணைந்து மேடைகளில் தோன்றி வரும் அமெலியோ விரைவில் ஹொலிவுட் திரைப்படம் ஒன்றில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.

மேலும், அவரது வாழ்க்கை பயணம் குறித்த புத்தகம் ஒன்றினையும் விரைவில் வெளியிட உள்ளார்.

டிக்டாக் மட்டுமல்லாமல் யூடியூப் போன்ற மற்ற சமூக ஊடகங்களிலும் அமெலியோ செயல்பட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

You must be logged in to post a comment Login