Cinema

சமூக வலைத்தளத்தில் வைரலாகும் விஜய் சேதுபதி பட போஸ்டர்

By  | 

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் துக்ளக் தர்பார். இப்படத்தை டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்குகிறார். வயகாம் 18 ஸ்டூடியோஸ் மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கோவிந்த வசந்தா இசையமைக்கிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அதிதி ராவ் நடித்து வருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடிக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் பெர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று மாலை வெளியிட இருப்பதாக பட குழுவினர் அறிவித்தார்கள். அதன்படி வெளியான போஸ்டர் சிறிது நேரத்திலேயே ரசிகர்களைக் கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

You must be logged in to post a comment Login