Women Achievers

சர்வதேச காடுகள் தினத்தில் மரங்கள் வளர்த்து சாதனை படைத்த பாட்டி திம்மக்கா பற்றியதோர் பார்வை

By  | 

இன்று உலக காடுகள் தினம் கொண்டாடப்படுகிறது. காடுகளின் பெருமையையும் அவசியத்தையும் வழிப்புணரவையும் எமக்கு அளத்துள்ளார்
ஸ்ரீ விருது பெற்ற பாட்டி திம்மக்கா .

இந்தியாவில் கர்நாடகாவில் 8 ஆயிரம் மரங்களை வளர்த்த 106 வயது பாட்டி திம்மக்காவுக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. விருதை பெற்றுக் கொண்ட பாட்டி இந்தியக் குடியரசு தலைவரை ஆசிர்வாதம் செய்து வாழ்த்திதுள்ளார். இந்த காட்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

கர்நாடக மாநிலம் ஹுலிகல் கிராமத்தை சேர்ந்தவர் திம்மக்கா. 106 வயதான இவர் மரங்களை வளர்ப்பதை முக்கிய பணியாக செய்து வருகிறார். இவரது கணவர் கடந்த 1991-ல் காலமானார்.

சுமார் 65 ஆண்டுகளாக மரங்களை வளர்க்கும் பணியை செய்து வந்த திம்மக்கா இதுவரையில் 8 ஆயிரத்திற்கும் மரங்களை வளர்த்திருக்கிறார். அவரது இந்த மகத்தான சேவைக்காக பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது.

தனது குழந்தையை வளர்க்க முடியாததால் 40 வயதில் திம்மக்கா தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போதுதான் மரங்களை வளர்ப்பது என்பது அவருக்கு ஆறுதல் அளித்திருக்கிறது. இதையடுத்து தொடர்ந்து அவர் மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வருகிறார்.

மரச்செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற சில சமயங்களில் 4 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று திம்மக்கா தண்ணீர் எடுத்து வருவாராம். கடந்த 65 ஆண்டுகளில் பாட்டி வளர்த்த மரங்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டியிருக்கிறது.

You must be logged in to post a comment Login