Uncategorized

சார்லஸ் எனும் பெண்!

By  | 

பிரான்ஸின் டானேரியில் சட்டத்தரணியின் மகனாகப் பிறந்த சார்லஸ{க்கு அவனது அம்மா பெண்களின் உடையை அணிவித்து, அழகு பார்ப்பது வழக்கம்.

சகோதரியின் உடைகள் சார்லஸ{க்கு அப்படியே பொருந்தின. பாரிஸில் மஜாரின் கல்லூரியில் படித்த சார்லஸ், நிதி இலாகா செயலாளராக  பணியாற்றினார்.

15ஆம் லூயியின் காதலி மேடம் பம்படாரை பெண் வேடமிட்டு ஏமாற்றுகிறேன் என பெட் கட்டினார் சார்லஸ். இதில் மன்னரே அசந்துபோய், சார்லஸை ஒற்றர் படையில் சேர்த்துக்கொண்டார்.

1755ஆம் ஆண்டு ரஷ்யாவுடன் ராஜ்ய உறவு பேண விரும்பிய 15ஆம் லூயி, டக்ளஸ்  மற்றும் சார்லஸை அனுப்பிவைத்தார். டக்ளஸின் உறவுப்பெண் என அறிமுகமான சார்லஸ் பெண் வேடமிட்டிருந்தார். பிரான்ஸ் – ரஷ்யா ஒப்பந்தம் வெற்றியடைந்ததும் மகிழ்ந்த மன்னர் லூயி, சார்லஸை இராணுவப் பிரிவுக்கு தலைவனாக்கினார்.

1793ஆம் ஆண்டு சார்லஸை பிரான்ஸ் நாட்டு தூதரகத்தில் பணியமர்த்தி, இங்கிலாந்துக்கு அனுப்பினார்கள். இங்கிலாந்தை உளவறிவதே சார்லஸின் முக்கிய பணியாக இருந்தது. ஆனால், அங்கிருந்த மேலதிகாரியோடு சார்லஸ் மனஸ்தாபப்பட்டு உறவு கெட்டுப்போனது. இதனால் சார்லஸ் பெண்ணாக வேடமிட்டு நடிக்கும்படி ஆயிற்று. பின் 1777ஆம் ஆண்டு பிரான்ஸ் திரும்பிய சார்லஸ், 1785ஆம் ஆண்டு  இங்கிலாந்துக்கு திரும்பி வாள் வீச்சுக்கென பள்ளி தொடங்கி பணம் சம்பாதித்தார்.

You must be logged in to post a comment Login