Cookery

சிக்கன் பிரியாணி

By  | 

தேவையான பொருட்கள்:
சிக்கன் – 1/2 கிலோ
பிரியாணி அரிசி – 1/2 கிலோ
பிரியாணி மசாலா – 1½ டீஸ்பூன்
கொத்தமல்லி, புதினா – 1 கப்
வெங்காயம் – 3 (பெரியது)
இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
தக்காளி – 3
பட்டை – 2 கிராம்
புதினா – 2
பெ.சீரகம் – சிறிதளவு
பிரியாணி இலை – 2
மசாலா – 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
பட்டை பொடி – 1/4 டீஸ்பூன்
கிராம்பு பொடி – 1/4 டீஸ்பூன்
தயிர் – 1 கப்
உப்பு – தேவைக்கு,
நெய் – 1/4 கப்
எண்ணெய் – 1/4 கப்


செய்முறை:
• குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானவுடன் பட்டை, கிராம்பு, பெ.சீரகம், பிரியாணி இலை சேர்த்து பின்பு பட்டை பொடி, கிராம்பு பொடி, கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கவும்.
• பின் வெங்காயம், இஞ்சி, பூண்டு பேஸ்ட், தக்காளி சேர்த்து வதக்கி அதில் சிக்கனை போட்டு சிறிதளவு உப்பு சேர்த்து 5 நிமிடம் வேக விடவும்.
• பின் தயிர், கரம் மசாலா, மிளகாய்த்தூள் மற்றும் பிரியாணி மசாலாவை வதக்கியவுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, கொதி வந்தவுடன் அதில் அரிசியை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான சூட்டில் 10 முதல் 15 நிமிடம் வைக்கவும்.
• இப்பொழுது கமகமக்கும் சுவையான சிக்கன் பிரியாணி தயார். இதனுடன் சிக்கன் குருமா மற்றும் தயிர் பச்சடி சேர்த்து சாப்பிடலாம்.
குறிப்பு: பிரியாணி அரிசியை 1ஃ2 மணி நேரம் ஊற வைத்து பின் ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி லேசாக வதங்கியவுடன் பயன்படுத்தினால் சுவை அதிகரிக்கும்.

You must be logged in to post a comment Login