Biodata

சினிமாவோடு நான்…

By  | 

தர்மதுரை ஜீவா

பெயர்: திருநங்கை ஜீவா சுப்பிரமணியம்
செல்லமாக: ஜீவா
பிறந்த திகதி: 1989.11.01
சொந்த ஊர்: சிவகாசி
பணி: நடிகை, மேக்கப் ஆர்ட்டிஸ்ட்
அடையாளம்: கன்னக்குழியழகு
மதம்: இந்து


குடும்பம்: அப்பா பட்டாசு தொழிற்சாலையிலும், அம்மா தீப்பெட்டி தொழிற்சாலையிலும் வேலை… இரண்டு தம்பிகள்.
சினிமாவுக்கு முன்: நடிகர் விஜயகாந்த் கல்யாண மண்டபம், கோயம்பேடு மார்க்கெட், டீக்கடை, ஸ்வீட் ஸ்டால், மருத்துவமனை, சின்னத்திரை நடிகைகளின் வீடுகள் என ஒரு இடத்தையும், ஒரு வேலையையும் விட்டுவைக்கவில்லை.


கற்ற கலை: நடனம்
நடிப்பு கற்றது: சின்னத்திரை நடிகைகளின் டச்சப் பெண்ணாக, இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்களின் உதவியாளராக இருந்தபோது…
அறிமுகம்: ‘ஆக்கம்” படம் – பூ விற்கும் பெண்ணாக…
அடுத்தடுத்து: தாரை தப்பட்டை, தர்மதுரை, தர்பார்


குறும்படங்கள்: அவள் நங்கை, ப்ளாட்ஃபோர்ம் நம்பர் 9, திருத்தாய் அவளே, அதிசயமான அர்ப்பணிப்பு
கேரக்டர்: எதையும் அர்ப்பணிப்போடு செய்பவர்


மறக்க முடியாத தருணங்கள்: தர்மதுரை படத்தை பார்த்துவிட்டு பெற்றோர் ‘நீ என் மகள்” என்று பாராட்டியது. பாராட்டு பெற்ற பின்னர் புடவை கட்ட ஆரம்பித்தது…
பொழுதுபோக்கு: இசை, மேக்-அப்


பிடித்த நடிகை: ராதிகா…. தர்மதுரையில் நடித்ததும் அவருக்காகத்தான்
எதிர்பார்ப்பு: திருநங்கைகளுக்கு பாதகமாகாத கதாபாத்திரங்கள்
கனவு: மண்ணில் புதையும் வரை சினிமாவோடுதான்…

 

You must be logged in to post a comment Login