Entertainment

சில வரி கதை….

By  | 
கடவுள் மனம் கொண்ட கணவன்
‘த பாருங்க ! இதுக்கு மேலேயும் நமக்கு குழந்தை பிறக்கும் என்ற  நம்பிக்கை எனக்கில்லை, பேசாம என் தங்கச்சியக் கட்டிக்கங்க. அவளாவது பெத்துத் தரட்டும்” திவாகர் எவ்வளவோ மறுத்தும் தன் முடிவிலேயே திடமாய் நின்றாள் செல்வி.
சில நிமிட அமைதிக்குப் பின். திவாகர் பேசினான். ‘ஏன் செல்வி இப்படிச் செய்தால் என்ன?…’
அவள் புருவத்தை உயர்த்தி, ‘என்ன? ‘என்று கேட்க,  ‘நான் உன் தங்கச்சியக் கட்டிக்கறதை விட நீ என் தம்பி குமாரைக் கட்டிக்கோயேன், அவன் உன்னைவிட ஆறு மாசம் பெரியவன்தான்!.. அவன் மூலமா நமக்கொரு குழந்தை வந்துட்டுப் போகுது!” என்றான்.
சட்டென்று நிமிர்ந்து பார்த்தவள், ‘சரி இன்னும் கொஞ்ச வருஷம் பொறுத்துப் பார்ப்போம்” சொல்லியபடி உள்ளே செல்ல, நிம்மதியானான் திவாகர்.

You must be logged in to post a comment Login