Cookery

சுவையான முருங்கைக்காய் சாம்பார்!

By  | 

தேவையான பொருட்கள்:

மைசூர் பருப்பு – 100 கிராம்

பெருங்காயம் – 1/4 தேக்கரண்டி

முருங்கைக்காய் துண்டுகள் – 8

தக்காளி  – 1

பச்சை மிளகாய் – 1

சின்ன வெங்காயம் – 3

மிளகாய்த் தூள் – 1/2 தேக்கரண்டி

மல்லித்தூள் – 2 மேசைக்கரண்டி

சீரகத்தூள் – 1 மேசைக்கரண்டி

மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி

புளி – நெல்லிக்காய் அளவு

உப்பு – தேவையான அளவு

மல்லித் தழை – சிறிதளவு

தாளிக்க:

எண்ணெய் – 3 மேசைக்கரண்டி

கடுகு – 1 தேக்கரண்டி

உளுந்தம் பருப்பு – 1/2 தேக்கரண்டி

வெங்காயம் – சிறிது

கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

  • குக்கரில் பருப்பு, பெருங்காயம், மஞ்சள் தூள் மற்றும் முழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் நன்கு வேக வைத்துக் கொள்ளவும்.
  • தக்காளி, மிளகாயை நீளவாக்கில்  வெட்டி வைக்கவும்.
  • சின்ன வெங்காயத்தை தோலுரித்து வைத்துக் கொள்ளவும்.
  • புளியை 300 மில்லி தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • குழம்பு வைக்கும் பாத்திரத்தில் 300 மில்லி புளித் தண்ணீருடன் முருங்கைக்காய், நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், உப்பு சேர்த்து அடுப்பில்  மிதமான சூட்டில் வைத்து கொதிக்கவிடவும்.
  • ஐந்து நிமிடங்கள் ஆனதும் மிளகாய்த் தூள், மல்லித்தூள், சீரகத்தூள் சேர்த்து மசாலா வாடை போகும்வரை நன்றாக  கொதிக்கவிடவும்.
  • மசாலா வாடை போனதும் வேகவைத்துள்ள பருப்பை போட்டு நன்றாக கலக்கிவிடவும்.
  • கொதித்ததும் மல்லித் தழையை தூவி அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.
  • அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, உளுந்தம் பருப்பு, வெங்காயம் போட்டு தாளிக்கவும்.
  • வெங்காயம் பொன்னிறமானதும் சாம்பாரில் சேர்த்து நன்றாக கலக்கிவிடவும்.
  • சுவையான முருங்கைக்காய் சாம்பார் தயார்.

You must be logged in to post a comment Login