Beauty

செம்பருத்திப் பூ ஹேர் பேக்

By  | 

தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் இளநரை, பொடுகுத் தொல்லை, முடி உதிர்தல், நுனியில் முடி வெடித்தல் என்பது போன்ற பல பிரச்சினைகள் உள்ளன. இவை அனைத்திற்கும் தனித்தனியான ஹேர்பேக் ட்ரை பண்ணுவதைவிட, இப்போது சொல்லப்போகும் செம்பருத்திப் பூ ஹேர்பேக் போடலாம்.

இந்த ஹேர் பேன் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

செம்பருத்திப்பூ இலைகள் – 10

கறிவேப்பிலை – கைப்பிடியளவு

மருதாணி இலை – கைப்பிடியளவு

செய்முறை:

செம்பருத்திப்பூ இலைகள், கறிவேப்பிலை, மருதாணி இலை இவை மூன்றையும் லேசாக தண்ணீர்விட்டு அரைத்து கொள்ளவும்.

அரைத்த கலவையை தலையில் தேய்த்து 30 நிமிடங்கள் ஊற வைத்து பின்னர் குளிக்கவும்.

இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்வதால் நன்கு முடி வளரும். மேலும் இளநரை, பொடுகுத் தொல்லை, முடி உதிர்தல், நுனியில் முடி வெடித்தல் என்பது போன்ற பிரச்சினைகளையும் போக்கச் செய்யும்.

You must be logged in to post a comment Login